‘மாஸ்டர்’ படம் தினமும் 6 காட்சிகள் திரையிடப்படும்..!

‘மாஸ்டர்’ படம் தினமும் 6 காட்சிகள் திரையிடப்படும்..!

மாஸ்டர்’ படத்திற்கு தினமும் 6 காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

வரும் ஜனவரி 13-ம் தேதி பொங்கல் தினத்தையொட்டி வெளியாகவிருக்கும் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே..

தற்போது தியேட்டர்களில் 50 சதவிகித டிக்கெட்டுகள்தான் வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஆணை இருப்பதால் அதிகப்பட்சமான தியேட்டர்களில் வெளியீடு, அதிகமான காட்சிகளை நடத்துவது என்று தயாரிப்பாளர் தரப்பும், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பும் முடிவு செய்திருந்தது.

இதன்படி எத்தனை காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று அரசிடம் கேட்டதற்கு அது உங்களது விருப்பம் என்று அவர்களும் சொல்லிவிட்டார்கள். இதனால் ஜனவரி 13-ம் தேதியில் இருந்து ஜனவரி 17-ம் தேதிவரையிலான 5 நாட்கள் மட்டும் தினமும் 6 காட்சிகளாக ‘மாஸ்டர்’ படத்தை திரையிடலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.