full screen background image

“மாஸ்டர் ஹீரோயின் மாளவிகாவுக்கே படம் இல்லையே..?” – நடிகை ரித்விகாவின் பதில்..!

“மாஸ்டர் ஹீரோயின் மாளவிகாவுக்கே படம் இல்லையே..?” – நடிகை ரித்விகாவின் பதில்..!

‘பரதேசி’ படத்தில் அறிமுகமான நடிகை ரித்விகா சில படங்களில் தனி நாயகியாக நடித்திருந்தாலும், தற்போது பல மீடியம் பட்ஜெட் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

“இப்படி நாயகியாக இல்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிப்பதில் வருத்தமில்லையா..?” என்ற கேள்விக்கு “மாஸ்டர்’ பட ஹீரோயின் மாளவிகா மோகனனுக்கு அடுத்தப் படமே கிடைக்கலியே..?” என்று எதிர்க் கேள்வியெழுப்பியிருக்கிறார் நடிகை ரித்விகா.

இது குறித்து நடிகை ரித்விகா அளித்த பேட்டியில், “இப்போவெல்லாம் ஹீரோ, ஹீரோயினே இல்லாமல் கதையை மட்டும் முக்கியமா வைச்சு படம் எடுக்குற அளவுக்கு சினிமால நிலைமை மாறிக்கிட்டிருக்கு. கேரக்டர் ரோல்ல நடிக்கிறதுல எனக்கு எந்தவித வருத்தமோ, கவலையோ இல்லை.

இப்போ நான் நிறைய படங்கள்ல முக்கியமான கேரக்டர்ல நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். நடிக்கும்போது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை. நாம ஏன் லீட் கேரக்டர் பண்ணலைன்னு எனக்குத் தோண மாட்டேங்குது. ஆனால் பாக்குறவங்களுக்கு ஏன் அப்படித் தோணுதுன்னு எனக்கும் தெரியலை.

ஹீரோயின் கேரக்டர்ஸ் பண்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஒரு நாளைக்கு நூறு பேர் வர்றாங்க. ஆனால் கேரக்டர் ரோல் செய்றதுக்குத்தான் இங்க ஆளே இல்லை. எல்லாருமே மெயின் லீடா நடிக்கணும்னுதான் வர்றாங்க. ஒரு சில படங்கள்ல நடிக்கிறாங்க. அதுக்கப்புறம் அடுத்தப் படம் கமிட் பண்றது கஷ்டமா இருக்கும். லோகேஷ் கனகராஜ் படத்துல விஜய்கூட நடிச்ச நடிகை அடுத்த படம் கமிட் பண்ணாங்களான்னே தெரியலை.

இப்படி டாப் ஸ்டார்ஸ்கூட நடிக்குறவங்களே ஒரே படத்துல காணாமப் போயிடற நிலைமையிருக்கும்போது நான் நிறைய படங்கள்ல நடிச்சிட்டிருக்கனே.. இது நல்லதுதானே..?”  என்று பதில் கேள்வியெழுப்பியிருக்கிறார் ரித்விகா.

Our Score