சமீபத்தில் இசை வெளியீடு நடந்த ‘மசாலா படம்’ எல்லா தரப்பு ரசிகர்களின் கவனத்தையும், விமர்சகர்களின் கவனத்தையும், வர்த்தகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘மசாலா படம்’ தணிக்கை அதிகாரிகளால் மிக சிறந்த படம் என பாராட்டப்பட்டு, ‘U’ சான்றிதழ் பெற்றுள்ளது.
“இந்த ‘மசாலா படம்’ தற்போது பெரிதாக அலசப்படும் ‘சமூக வலைத்தளங்களில் சினிமா விமர்சனம்’ என்ற கருத்தை ஒட்டிய படமாகும். நல்ல தரமான, ஜனரஞ்சகமான படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு என்பதை இந்த ‘மசாலா படம்’ நிரூபிக்கும்..” என்கிறார் படத்தின் இயக்குநர் லஷ்மண்.
பாபி சிம்ஹாவின் ஆளுமையும், மிர்ச்சி சிவாவின் இயல்பான நடிப்பும், இயக்குநர் லக்ஷ்மணனின் திறமையான இயக்கமும் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பை பெற்று தந்துள்ளது.
தமிழ் திரையுலக ரசிகர்களில் சகல தரப்பினரையும் கவரும் வண்ணம் உருவாகியுள்ள இந்த ‘மசாலா படம்’ வரும் அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.