full screen background image

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படம் துவங்கியது…!

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படம் துவங்கியது…!

விஷாலின் 33-வது படமான ‘மார்க் ஆண்டனி’ படம் இன்று பூஜையுடன் துவங்கியது.

விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரான S.வினோத்குமார் தனது மினி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் மிக முக்கியமான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா, நிழல்கள் ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள் .

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி, இயக்குகிறார். ‘இசை அசுரன்’ ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

கலை இயக்கம் – உமேஷ் ராஜ்குமார், உடைகள் – சத்யா N.J., நடன இயக்கம் – தினேஷ், அஸார், பாடல்கள் – மதுர  கவி ,அஸல்  கோலாறு, நிர்வாக தயாரிப்பு – சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத், புகைப்படங்கள் – R.S.ராஜா, விளம்பர வடிவமைப்பு – கபிலன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று காலை சென்னையில் தொடங்கியது.

Our Score