full screen background image

மரியா – சினிமா விமர்சனம்

மரியா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஹரி கே.ஹரசுதன் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார்.

ந்தப் படத்தில் சாய்ஸ்ரீ பிரபாகரன், பாவெல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – அரவிந்த் கோபாலகிருஷ்ணன் – பரத் சுதர்ஷன், ஒளிப்பதிவு – மணி சங்கர், படத் தொகுப்பு – காமேஷ் – நிஷார் ஷெரீப், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (TEAM AIM).

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒவ்வொரு மதங்களில் இருக்கும் பிரச்சனைகளை தனி மனித பிரச்சனையாக கருத்தில் கொண்டு அந்த மதம் அப்படி இந்த மதம் எப்படி என்று கேலி செய்வதும், கிண்டல் செய்வதும் இப்போது சினிமாவில் அதிகமாகிவிட்டது.

அதிலும் 2011-ஆண்டு மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கையான இந்து தீவிரவாதம் என்ற ஒரே ஒரு கொள்கையை வைத்து படம் எடுக்கும் புத்திசாலி இயக்குர்களும், பிழைக்க தெரிந்த தயாரிப்பாளர்களும் இந்திய சினிமாவில் தற்போது அதிகமாக தங்களது வித்தையை காட்டி வருகிறார்கள்.

அப்படியொரு எண்ணத்தில்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இந்த மரியா என்ற படத்தை தயாரித்து தானே எழுதியும், இயக்கியும் இருக்கிறார்.

உலகம் முழுவதும் கன்னியாஸ்திரிகள் என்ற ஒரு பெயருக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் கருத்து சுதந்திரம் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவிலேயே பல ஹாலிவுட் படங்களில் இந்த கன்னியாஸ்திரி என்ற வேடம் ஒவ்வொரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் சிக்கி அது கடவுளின் பெயரால் செய்யப்படும் ஒரு சர்வாதிகார நடவடிக்கை என்றும் பேசி இருக்கிறார்கள்.

அது போன்ற ஒரு மனநிலையில்தான் ஹரி ஹரசுதன் என்ற ஒரு இந்து இயக்குர் இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.

பாரம்பரியமான ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மரியா என்ற நாயகி அவருடைய இளம் வயதில் கன்னியாஸ்திரிகளுக்கான மடத்தில் சேர்த்து விடப்பட்டார். இப்போது அங்கே அவர் கன்னியாஸ்திரி ஆக இருக்கிறார். வருடத்திற்கு ஒருமுறை விடுமுறை கிடைக்கும்போது மரியா தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து அம்மா மற்றும் உறவினர்களை பார்ப்பது வழக்கம்.

அப்படித்தான் ப்போதும் ரியா தன் சொந்த ஊருக்கு வருகிறார். தன்னுடைய ஒன்றுவிட்ட தங்கையான ஏக்ஸின் வீட்டில் மூன்று நாட்கள் இருக்கலாம் என்று நினைப்பில் வந்திருக்கிறார்.

க்னஸ் அந்த வீட்டில் தன்னுடைய காதலனுடன் கோயிங் ஸ்டடியில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.தேபோல் ஏக்னெஸின் காதலியும் அதே வீட்டில் அவளுடைய காதலனுடன் இணைந்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இது எதுவும் தெரியாத ரியா அதை வீட்டுக்குள் நுழைந்த உடன் மற்ற சராசரி பெண்களைப் போலவே வாழலாம் என்று நினைத்து கிறிஸ்துவ அங்கியை தூக்கி வீசிவிட்டு அவருடைய உடலுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து ஒரு புது உலகத்தில் மூன்று நாட்கள் வாழலாம் என்று நினைக்கிறார்.

ஆனால் முதல் நாள் இரவிலேயே ஏக்னெஸூம் அவது தோழியும் தங்களுடைய காதலர்களுடன் படுக்கையறையில் கலவியில் ஈடுபட, அந்த சப்தம் வெளியில் கேட்டு மரியாவை ஏதோ ஒன்று செய்கிறது.

டியேறி சென்று அவர்களுடைய அறையின் கதவில் காது வைத்து அந்த சத்தத்தை கேட்கும் அளவுக்கு மரியாவின் மனம் தூண்டுகிறது. இதுவரையிலும் அடக்கி வைக்கப்பட்டிருந்த அவருடைய செக்ஸ் உணர்வு கிளர்ந்து ழுகிறது. அறைக்குள் என்ன நடக்கிறது என்கின்ற கற்பனையில் இருக்கும் மரியா, தனக்குள் திடீரென்று எழுந்த அந்த பாலுணர்வை அடக்க முடியாமல் சுய இன்பம் செய்கிறாள்.

முதல் நாள் மட்டுமே இந்த ரகளை இல்லை. அடுத்த நாளும் அது தொடர்கிறது அப்பொழுது தன்னுடைய காதலையும், காமத்தையும் அடக்க முடியாமல் தவிக்கிறாள் மரியா. ஏக்னசின் காதலன் ரியாவின் இந்த தடம் மாறுதலை, அவளுடைய கண்களின் மூலமாகவே கண்டறிந்து உனக்கு சுகம் கொடுக்க நான் தயார் என்கிறான்.

மரியாவை செக்ஸுக்காக அணுகுகிறான் ஏக்னெஸின் காதலன். அது ஒரு அளவோடு நின்று கொள்ள.. ஏதோ தப்பித்த உணர்வில் இருக்கிறாள் மரியா. அப்போது அவளுக்குள் எழுந்த ஒரு கோபம் அவளுடைய அம்மாவிடம் கொண்டு போய் முடிகிறது. தன்னுடைய விருப்பத்தையே எதிர்பார்க்காமல், தன்னுடைய விருப்பம் என்ன.. இந்த சமூகத்தில் நான் என்னவாக வாழ போகிறேன் என்பதெல்லாம் தெரியாமல் தன்னை மடத்தில் கொண்டு போய் சேர்த்து விட்டதாக அம்மா மீது கோபப்படும் ரியா கன்னியாஸ்திரி வாழ்வில் இருந்து விலகுவதாக அவளிடமே சொல்கிறாள். வெகுண்டெழும் மரியாவின் தாயார் அவளை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள்.

மீண்டும் ஏக்னெஸின் வீட்டுக்கே வரும் ரியா இன்னும் மூன்று நாட்கள் மட்டும் தான் அங்கேயே தங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டு ஊரை சுற்றுகிறாள். அப்பொழுது கிறிஸ்துவ மதத்திலேயே பிறந்து வளர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து சாத்தான்களின் அடிமை கூடாரத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தை சந்திக்கிறாள் மரியா. அந்தக் கூட்டத்தில் சாத்தானின் பிரதிநிதி நான்தான் என்று சொல்லும் பாவல் நவகீதன் கிறிஸ்தவத்தில் இருக்கும் பிரச்சனைகளை சொல்லி இரட்டை நிலை மனப்பான்மையோடு எந்த வேலையும் செய்யக் கூடாது. எந்த இடத்திலும் இருத்தலும் கூடாது நீ சாத்தான் நீ அடிமைகளில் உறுதியாக வா..” என்று சொல்லி மரியாவை அழைக்கிறார்.

இந்தக் குழப்பத்தில் இருக்கும் மரியா ஏக்னெஸின் காதலனுடன் காம வேட்கையில் இறங்க முயலுகையில் ஏக்னஸிடம் இருவரும் பிடிபடுகிறார்கள். ஏக்னெஸ் மரியா மீதும் காதலன் மீதும் பெரும் கோபம் கொள்கிறாள்

இதன் பின்பு என்ன நடந்தது மரியாவின் கன்னியாஸ்திரி வேலை தொடர்ந்ததா.. அல்லது அதை விட்டுவிட்டு அவள் சாத்தானின் கூடாரத்தில் அடிமையானாளா… இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

இது அவார்டுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதை இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலையும் ஒருங்கே அமைந்திருப்பதால், இந்தப் படத்தில் நடித்த அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அல்லது நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஏக்னெஸ்ஸாக நடித்த சித்து பார்த்தவுடன் அப்படியே கட்டிக் கொள்ளும் அளவுக்கு கேமராவுக்கு ஏற்ற முகமாக அமைந்திருப்பவர். “அக்கா”, “அக்கா” என்று பாசத்தைக் கொட்டி மரியாவுக்கு மரியாதை கொடுப்பவர்… ஒரு கட்டத்தில் தன் காதலன் சோரம் போய்விட்டான் என்பதை அறிந்து அந்த நிமிடத்தில் பொங்கி எழுந்து கன்னியாஸ்திரியாக இருந்தும் இப்படியா என்று அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பும்போது அந்த நேரத்தில் நமக்கு மிகவும் பிடித்தவராயிருக்கிறார்.

மரியா சுய இன்பம் செய்வது போன்ற காட்சிகளை நாம் அதிர்ச்சியாக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார். மரியாவாக நடித்த சாய்ஸ்ரீ அந்தக் காட்சியில் நிஜமான ஒரு பெண் அந்தக் காட்சியில் என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துவாரோ, அதை அப்படியே வெளிப்படுத்தி நமக்கு அதீத அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய சாத்தான்களின் கூடாரத்தில் சாத்தான்களின் அரவணைப்பில் வாழ விரும்பி வருபவர்களுக்கு விளக்கம் சொல்லி அவர்களை தன் அடிமைகள் என்று உணராமலேயே அடிமைப்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக வசனங்களை டெலிவரி செய்திருக்கிறார் பாவல் நவகீதன். நடிக்காமலேயே அவர் அமைதியாக பேசுகின்ற  பேச்சிலேயே ஒரு சிறந்த நடிப்பு தெரிகிறது.

மற்றைய நட்சத்திரங்கள் அத்தனை பேருமே மிகச் சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார்கள். அதுவும் மரியாவாவின் அம்மாவாக நடித்தவரும் சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் கதை திரைக்கதை வடிவத்தில் ஒரு மோசமான உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும் தொழில் நுட்பத்தில் மிகச் சிறப்பு என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒளிப்பதிவாளர் படம் முழுவதையும் லைட்டான வெளிச்சத்தில் படமாக்கி, கிரேடிங்கிலும் ஒரு வித்தியாசமான திரைப்படமாக நமக்கு உணர்த்தும் வகையில் தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஒவ்வொரு காட்சியிலும் கேமராவின் கோணங்களும், படமாக்கலும் நாம் இதுவரையில் பார்க்காததுதான். அதேபோல் பின்னணி இசையும் எந்த அளவுக்கு நம்முடைய கவனத்தை ஈர்க்க முடியுமோ, அந்த அளவுக்கு ஈர்த்து படத்தை தொடர்ந்து பார்க்க வைத்திருக்கிறது.

இசை அமைப்பாளர் பரத் சுதர்சனின் இசை கவனிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசை சொக்க வைத்திருக்கிறது.

21 வயதான ஒரு பெண் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தப்பட்டு எந்த வேலைக்கும் போய் சேர மாட்டார்கள். அவர்களுக்கு அந்த நேரத்தில் எதிர்பார்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் “என்னுடைய அம்மாவின் வற்புறுத்தலால்தான் நான் கன்னியாஸ்திரி ஆனேன். என்னுடைய அம்மா என்னுடைய சிந்தனையை கன்னியாஸ்திரி மடத்தின் பக்கம் திசை திருப்பி எனக்கு என்ன விருப்பம்… என்னுடைய ஆசைகள் என்ன என்பதை கேட்காமல் என்னை கன்னியாஸ்திரி ஆக்கிவிட்டார்..” என்று மரியா குற்றம் சாட்டுகிறார்.

இதுவரையிலும் கதை சரிதான் ஆனால் மரியாவின் கன்னியாஸ்திரியை வேடம் களைவதற்கு அவர் சொல்கின்ற காரணமாக திரைக்கதைகள் சொல்லப்பட்டிருக்கும் காரணம் மிக மிக மலிவானது. வெட்கக்கேடானது.

மரியாவின் செக்ஸ் உணர்வு அடக்கி வைக்கப்பட்டு இருப்பதாக இயக்குநர் காட்டியிருக்கிறார். அடக்கி வைக்கப்பட்டிருந்த எதுவாக இருந்தாலும் அது உடைபடும்போது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு ஆபத்துதான் மரியாவை தவிர அவருடைய தங்கையின் குடும்ப வாழ்க்கையையும் அழிக்கிறது.

ஆனால் அது பற்றி எந்த ஒரு சமரசமும் இல்லாமல் இயக்குநர் தன்னுடைய எழுத்தில் மரியாவின் செக்ஸ் உணர்வு மட்டுமே அவர் கன்னியாஸ்திரி படத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணமாக சொல்லி இருக்கிறார்.

இது மிக மிக தவறான ஒரு கருத்து. முன் மொழிதல் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கென்று ஒரு குடும்பம்.. ஒரு காதலர், கணவர், குழந்தைகள் குடும்பமாக இருக்க நான் விரும்புகிறேன் என்று அவர் சொல்லியிருந்தால் நிச்சயமாக அதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் என்னுடைய செக்ஸ் உணர்வை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று திரும்பத் திரும்ப அது போன்ற காட்சிகள் மூலமாகவே அவர் சொல்லிவிட்டு சாத்தானின் கூடாரத்தில் ஐக்கியமாகி அதன் பின் அது சாத்தானிடம் என்ன செய்யலாம் என்பதை கேட்டு, கடைசியாக திருமணமும் ஆகாமல் முறைகேடான ஒரு வழியில் பிள்ளையை சுமக்கும்படி தன் வாழ்க்கையில் தான் நினைத்தபடி மரியா நடப்பது மிகப் பெரிய தவறு.

ஒரு சமூகத்தில் ஒருவன் செய்த தவறு அந்த சமூகத்தில் 10 பேரையாவது பாதிக்கும் என்பார்கள். அதுபோலத்தான் இந்தப் படத்தின் முடிவு நிச்சயமாக தான்தோன்றித்தனமாக அலையும் ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்வதெல்லாம் சரி என்று சொல்வது போல காட்டி இருக்கிறார் இயக்குநர். இந்த கருத்து சொல்லலுக்காக இந்த இயக்குநருக்கு நம்முடைய கடுமையான கண்டனங்கள்.

திரைப்படம் என்பது மக்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டுவதற்காக துவக்கப்பட்டது. அதற்கு முன்பு இருந்த நாடகமும் மக்களிடையே அவர்களுக்கான ஒரு கல்வியை, அனுபவ அறிவை கொடுத்தது. ஆனால், இப்போதைய சினிமா ஒருவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் போக்கில் அது சரி என்று வலிந்து திணிக்கப்பட்ட ஒரு கதையை சொல்லி இது மாதிரியான பல அடுத்தடுத்த தலைமுறைகளாக வரும் இளைஞர்களையும், இளைஞிகளையும் கெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அதுபோல இந்தப் படம் கன்னியாஸ்திரியாக இருப்பவர்களை அசிங்கப்படுத்தி இருக்கிறது. கேவலப்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் நிச்சயமாக எடுத்திருக்கவே கூடாத ஒரு திரைப்படம்.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்றாலும் அவரவர் கருத்துக்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொண்டால்கூட பரவாயில்லை. ஆனால் ஒரு சமூகத்துக்கே ஒரு மதத்துக்கே கேடு விளைவிக்கும்படியான ஒரு திரைக்கதையை தனி மனித உரிமை என்கின்ற அர்த்தத்தில் சொல்வது மகா பாவம். அந்தப் பாவத்தை நிறையவே செய்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.

முதலில் இந்த இயக்குநர் தான் பிறந்திருக்கும் இந்து மதத்தில் இருக்கும் இப்படிப்பட்ட பயங்கரங்களை வெளியில் சொல்லி இருந்தால் நிச்சயமாக பாராட்டலாம். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு அடுத்த மதத்தில் உள்ளே நுழைந்து குட்டையை குழப்புவதுபோல கிறிஸ்தவ மத கன்னியாஸ்திரிகள் சேவை மனப்பான்மையுடன், கல்வி அறிவை கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கொடுத்து மத சேவையை செய்து வரும் அவர்களை கேவலப்படுத்தி இருப்பது வன்மையாக கண்டனத்திற்குரியது.

இந்த படம் நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றதாக இயக்குநர் அறிவித்த பொழுதே ஒரு சந்தேகம் இருந்தது. இதுபோன்ற உண்மைக்கு மாறான அல்லது சமூக கேடான திரைப்படங்கள்தான் தனி மனித உரிமை, தனி மனித விருப்பம் என்ற அடிப்படையில் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்று வருகிறது.

அதே சமயம் இது போன்ற படங்களை நாம் புறக்கணிப்பதுதான் சாலச் சிறந்தது. பல்வேறு மதங்கள், சமயங்களை ஏற்றுக் கொண்டு மதச்சார்பற்ற நாடாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற விஷத்தை தெளிக்க அனுமதி தரவே கூடாது.

மத்தியில் இப்போது ஆட்சி செய்து வரும் இந்து மத ஆதரவு கட்சி இது போன்ற பிற மதங்களை துவேஷமாக பேசுவதற்கு கண்ணை மூடிக் கொண்டு அங்கீகாரம் கொடுத்திருப்பதுதான் இந்தப் படம் சென்சாரில் தப்பி வெளியில் வந்திருப்பதை காட்டுகிறது.

ஆனால் அதே சமயம் இந்து மதத்தில் இருக்கும் சாமியார்களின் அந்தரங்க லீலைகளை வெளியிட்டால், நிச்சயம் அந்தப் படம் வெளியாகாது. வெளியாகாமல் தடுப்பதற்கு சென்சார் போர்டே குட்டிக்கரணமெல்லாம் அடிப்பார்கள்.

ஆக மொத்தம் இந்தப் படம் மத அரசியலை முன் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தைப் பார்ப்பதும், பார்க்காததும் உங்களுடைய விருப்பம்..!

 

Our Score