1. என்றென்றும்
என்.ஓ.டி. புரொடெக்சன்ஸ் சார்பில் சினிஷ் ஸ்ரீதரன் தயாரிக்கும் இப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார். சதீஷ் கிருஷ்ணன், பிரியங்கா ரெட்டி நடித்திருக்கிறார்கள். தரண்குமார் இசை. இதுவொரு சஸ்பென்ஸ், திரில்லர்வகை படம்.
2. எதிர்வீச்சு
இப்படத்தில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. இந்த படம் கோடம்பாக்கத்தில் உருவாகவில்லை. மலேசியாவில்தான் படமாக்கப்பட்டுள்ளது. அங்கே ‘கோல்’ என்ற பெயரில் உருவான இப்படம் இங்கே ‘எதிர்வீச்சு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
தமிழில் ‘சுண்டாட்டம்’ படத்தில் நடித்த இர்பான் கதாநாயகனாக நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த ரஸ்னா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சின்னி ஜெயந்த், நளினி, சிங்கமுத்து, வையாபுரி, ராஷிக், மலேசியாவைப் சேர்ந்த உதயா, ரதி, கிளிமாஞ்சாரோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜாமணி இசையமைக்க, பிர்லா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘மவுனம் சம்மதம்’, ‘ஏர்போர்ட்’, ‘படிச்ச புள்ள’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய குணா இப்படத்தை இயக்கியுள்ளார்.
கால்பந்து விளையாட்டை இண்டோர் ஆடிட்டோரியத்தில் விளையாடுவதற்கு பெயர் புட்சால். இதில் ஒரு அணிக்கு 5 பேர் வீதம் ஆடுவார்கள். ஒரு விளையாட்டு 15 நிமிடம்தான் நடக்கும். உலகத்தின் பல நாடுகளில் இந்த விளையாட்டு சூதாட்டம் போன்று நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாடுகளில் மட்டும் இந்த விளையாட்டு இன்னமும் அறிமுகமாவில்லை. இந்த விளையாட்டை மையமாக கொண்டுதான் இந்தப் படம் உருவாகியுள்ளதாம்.
3. நாங்கெல்லாம் அப்பவே அப்படி
இதுவொரு தெலுங்கு டப்பிங் படம். ‘உதயபுரம் சுல்தான்’ என்ற மலையாளப் படத்தை தெலுங்கில் 2012-ம் ஆண்டு ‘டெனிகாய்னா ரெடி’ என்ற பெயரில் தயாரித்தார்கள். இதில் விஷ்ணு மஞ்சு, ஹன்ஸிகா மோத்வானி, பிரபு, சீதா, சுமன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஜி.நாகேஸ்வர்ரெட்டி இயக்கியிருக்கிறார். படம் தெலுங்கில் ஹிட்டடித்துள்ளது. 6 கோடியில் தயாரிக்கப்பட்டு 30 கோடியை வசூல் செய்ததாம். ஹன்ஸிகாவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு நினைத்துள்ளதால் இதனை ‘நாங்கெல்லாம் அப்பவே அப்படி’ என்ற பெயரில் இப்படி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் 2 பாடல்களுக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
4. காதலை உணர்ந்தேன்
இன்று முதல் தமிழகமெங்கும் என்ற விளம்பரத்துடன் சென்னையில் உள்ள எம்.எம். தியேட்டர் மற்றும் சீனிவாசா தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. அதிலும் எந்த ஷோ என்பதும் தெரியவில்லை. உஷாதேவி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறார்கள். எழுதி, இயக்கியிருப்பது பாரதி சுப்ரமணியம்.
5. ஆக்சன் கிட்ஸ்
டாங் லீ நடித்துள்ள ஆங்கில டப்பிங் படம்.
6. 300 – Rise of an Emperor
இதுவும் ஆங்கில டப்பிங் படம்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து பரபரப்பாக்கிய 300 சோல்ஜர்ஸ் படத்தின் 2-வது பாகம்.
நிமிர்ந்து நில் திரைப்படம் சில பிரச்சினைகளினால் இன்று வெளியாகவில்லை. நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.