இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் மார்ச் 14, 2014

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் மார்ச் 14, 2014

இந்த வார வெள்ளியன்று(14-03-2014) வெளியாகியுள்ள திரைப்படங்கள் :

1. ஆயிரத்தில் ஒருவன்

‘கர்ணனின்’ வெற்றிக்குப் பின்பு அதே திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் புரட்சித் தலைவரின் இந்த புகழ் பெற்ற படத்தின் உரிமையை வாங்கி டிஜிட்டலைஸ் செய்து வெளியிட்டிருக்கிறார்.

Aayirathil Oruvan Movie New Posters (9)

1965-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ரிலீஸான இந்தப் படம் அப்போதே பல ஊர்களில் 100-வது நாள் கண்டது. மிகச் சிறந்த பாடல்கள்.. மிகச் சிறந்த இயக்கம்.. தலைவரின் ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்து அம்சங்களுடன் ஜெயலலிதா என்னும் புதிய ஹீரோயினின் அசத்தல் அழகு.. எல்லாம் சேர்ந்து இப்போதுவரையிலும் இந்தப் படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களுக்கு அமுதசுரபியாய் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

எம்.எஸ்.விஸ்வநாதன்-பி.ராம்மூர்த்தி இசை கூட்டணியில், ஆர்.ஷண்முகம்-சக்தி கிருஷ்ணசாமி வசன கூட்டணியில் தயாரித்து இயக்கியிருக்கிறார் மெகா ஹிட் இயக்குநர் பி.ஆர்.பந்தலு. இந்தத் தலைமுறை ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்..

2. காதல் சொல்ல ஆசை

Kadhal-Solla-Aasai-Posters-

எமர்சைன்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் இது. கோழி கூவுது ஹீரோ அசோக் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயின் மது ரகுராம், வாஷ்னா அஹமத், எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன்,  ரவி ராகவேந்தர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம்.லேகா இசையமைத்திருக்கிறார். கே.எம்.ரியாஸ் எடிட்டிங். பாடல்களை பா.விஜய்யும், கே.எஸ்.தமிழ்சீனுவும் எழுதியிருக்கிறார்கள். எழுதி, இயக்கியிருக்கிறார் கே.எஸ்.தமிழ் சீனு.

காதலை சொல்ல ஆசைப்பட்டு கடைசிவரையிலும் சொல்லாமலே விட்டுவிட்டதால் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

3. ஒரு காதல் ஒரு மோதல்

கந்தன் கியர்அப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. விவேக் ராஜகோபால், மேகா பர்மன், ரூபா நட்ராஜ், பிரமிட் நடராஜன், மீரா கிருஷ்ணன், அம்மு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்  கே.ஆர்.கவின் இசையமைத்திருகிறார். டி.ஜி.கீர்த்தி குமார் இயக்கியிருக்கிறார்.

Oru-Modhal-Oru-Kadhal

ஒரு காதல் தோல்வியடைந்து போக.. இன்னொரு காதலை ஹீரோவே பேசி முடித்து க்ல்யாணம்வரைக்கும் கொண்டு செல்வதுதான் கதை..!

4. ஆதியும் அந்தமும்

என்.கே. கிராப்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ரமணி தயாரித்திருக்கிறார். சீரியல் நடிகர் அஜய், மிட்டாலி அகர்வால், கவிதா ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எல்.வி.கணேசன் இசையமைத்திருக்கிறார். சின்னத்திரை நடிகர் கெளஷிக் எழுதி, இயக்கியிருக்கிறார்.

Aadhiyum-Andhamum-Poster

இது சஸ்பென்ஸ், திரில்லர் வகையிலான திரைப்படம். ஊட்டியில் இருக்கும் ஒரு மனநல மருத்துவனையில் நடக்கும் சில சம்பவங்களை அந்த மருத்துமனையில் மருத்துவராக இருக்கும் அஜய் கண்டுபிடிக்கத் துவங்குகிறார். ஆனால் அது எங்கே போய் முடிகிறது என்பதுதான் கதை..

5. வங்கக்கரை

நாகை பிலிம்ஸ் தயாரிப்பில் கே.டி.முருகனே தயாரித்து இயக்கியிருக்கிறார். கே.டி.முருகனே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். உடன் ஜோதிஷா, ஷினு, ‘காதல்’ சுகுமார், ‘உடுமலை’ ரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி ஒளிப்பதிவு செய்ய அன்பரசு இசையமைத்திருக்கிறார்.

Vangakarai-Poster

நாகப்பட்டினம் அருகேயிருக்கும் ஹீரோ முருகனின் மீனவ வாழ்க்கைப் போராட்டம்தான் கதை..!

6. மறுமுகம்

என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிட்டட் நிறுவனம் சார்பில் சஞ்சய் டாங்கி தயாரித்திருக்கிறார். டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கனகராஜ் ஒளிப்பதிவு செய்ய அகஸ்தியா இசையமைத்திருக்கிறார். கமல் சுப்ரமணியம் இயக்கியிருக்கிறார்.

Marumugam-Movie-Poster

இதுவும் சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலான படம்தான்.. தவறான நடத்தை கொண்ட பெண்களை கொலை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் டேனியல்.. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான ப்ரீத்திதாஸ் அவரை தேடி வர டேனியலின் மறுமுகம் அவருக்குத் தெரிகிறது. அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

7.  இதுவும் தவிர  நான் ஸ்டாப்  என்ற ஹாலிவுட் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

Our Score