‘மரைக்காயர்-அரபிக் கடலின் சிங்கம்’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்

‘மரைக்காயர்-அரபிக் கடலின் சிங்கம்’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்

மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன்லாலின் நடிப்பில் மிகப் பெரிய பொருட் செலவில், வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய திரைப்படம் ‘மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்.’

இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இளைய திலகம் நடிகர் பிரபுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘காலாபானி’ படத்தில் மோகன்லாலும், பிரபுவும் இணைந்து நடித்திருந்தனர். ‘காலாபானி’ வெளியாகி தற்போது  25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும், பிரபுவும் இந்த ‘மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

காலாபாணி படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு வெளியிட்டார். இப்போது இந்த ‘மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ என்கிற மலையாளப் படத்தையும் ‘மரைக்காயர் – அரபிக் கடலின் சிங்கம்’ என்கிற பெயரில் தமிழில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடவிருக்கிறார் என்பது சிறப்பானதாகும்.

இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், பைசால், சித்திக். சுரேஷ் கிருஷ்ணா போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

எழுத்து & இயக்கம் – பிரியதர்ஷன், தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ் (ஆண்டனி பெரும்பவூர்), இணை தயாரிப்பு – DR ராய் CJ , சந்தோஷ் T குருவில்லா, தயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில், வசனம் – RP பாலா, ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு, இசை –  ரோனி நபேல், பின்னணி இசை – ராகுல் ராஜ், அன்கித் சூரி, லீல் இவான்ஸ் ரோடர், நடன இயக்கம் – பிருந்தா, பிரசன்னா, நிர்வாக தயாரிப்பு – சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் டயல், தமிழ்நாடு வெளியீடு –  V கிரியேஷன்ஸ் கலைப்புலி S.தாணு.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழில் இப்படம் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ எனும் பெயரில் நேரடி திரைப்படமாக வரும் மார்ச் 26-ம் தேதி ரிலீசாகிறது.

Our Score