full screen background image

நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ திரைப்படம்

நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்புத் திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன், யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும்  பலரும் நடிக்கின்றனர்,

கதை & இயக்கம் – டியூட் விக்கி, இசை – ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் ISC, படத் தொகுப்பு – ஜி.மதன், கலை இயக்கம் – மிலன், உடைகள் வடிவமைப்பு – அனுவர்த்தன், உடைகள் – பெருமாள் செல்வம், ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார், விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் டிகேடி, தயாரிப்பு  மேற்பார்வை – A.P.பால் பாண்டி, தயாரிப்பு நிர்வாகம் – ஷ்ரவந்தி சாய்நாத், இணை தயாரிப்பு – A.வெங்கடேஷ், தயாரிப்பு – S. லக்ஷ்மன் குமார், தயாரிப்பு நிறுவனம் – பிரின்ஸ் பிக்சர்ஸ், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் குமார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன்  போஸ்டரை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலானது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Our Score