full screen background image

நடிகர் கிஷோருடன் டூப் இல்லாமல் மோதிய குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம்!

நடிகர் கிஷோருடன் டூப் இல்லாமல் மோதிய குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம்!

வி.ஆர்.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ‘மஞ்சக் குருவி.’

இந்தப் படத்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குங்ஃபூ கலைஞர்களை உருவாக்கியவர் ராஜநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது படத் தொகுப்பு செய்ய, கே.எம்.நந்தகுமார் கலையை கவனிக்க, மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். சௌந்தர்யன் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சின்னதம்பி இயக்கியுள்ளார். பத்திரிகை தொடர்பு – கோவிந்தராஜ்.

சமீபத்தில் இந்தப் படத்திற்காக ஒரு செங்கல் சூளையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்பொழுது, குங்பூ மாஸ்டரான ராஜநாயகம் ரோப் பயன்படுத்தாமல், டூப் இல்லாமல் கிஷோருடன் மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

 

Our Score