full screen background image

அண்ணன்-தங்கை பாசத்தை சொல்ல வரும் ‘மஞ்சக் குருவி’ படம்..!

அண்ணன்-தங்கை பாசத்தை சொல்ல வரும் ‘மஞ்சக் குருவி’ படம்..!

பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயிரோட்டமாக காட்ட வரவிருக்கும் படம் ‘மஞ்சக் குருவி’.

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் இந்த ‘மஞ்சக் குருவி’ படத்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக ‘குங்ஃபூ மாஸ்டர்’ ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அரங்கன் சின்னதம்பி, இசை – சௌந்தர்யன், ஒளிப்பதிவு – ஆர்.வேல், எடிட்டிங் – ராஜா முகமது, சண்டை – மிரட்டல் செல்வா, கலை கே.எம்.நந்தகுமார், மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், தயாரிப்பு – விமலா ராஜநாயகம்.

இந்தப் படத்தில் அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீரஜா நடித்துள்ளார். சௌந்தர்யன் இசையில், தங்கையை நினைத்து, அண்ணன் பாடும் பாடல், கல் நெஞ்சையும் உருக வைக்கும். ‘கூட பொறந்த பொறப்பே’… என தொடங்கும் அந்தப் பாடலை, சொளந்தர்யனே தனது வசீகர குரலில் பாடியுள்ளார்.

சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தை மிக விரைவில் திரையில் பார்க்கலாம்!

Our Score