‘மணியார் குடும்பம்’ படத்தின் இசையை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்..!

‘மணியார் குடும்பம்’ படத்தின் இசையை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்..!

நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஹீரோவாக நடிக்கும் 'மணியார் குடும்பம்' படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினரும், பல்வேறு திரையுலக முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர்கள் சேரன், மோகன்ராஜா, கரு.பழனியப்பன், கெளரவ்,  ஏ.வெங்கடேஷ், சீனு ராமசாமி, பிரபு சாலமன், சிவா, நடிகர்கள் சூரி, ஆர்.கே.சுரேஷ், ஜெயப்பிரகாஷ், நடன இயக்குநர் ராபர்ட், தயாரிப்பாளரும், வெளியீட்டாளருமான சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.