ரித்திஸ் ஹரிஸ் மூவீஸ் எனும் புதிய நிறுவனத்தின் சார்பில் பி.முத்துராமலிங்கம் தயாரிக்கும் திரைப்படம் ‘மணம் கொண்ட காதல்’
இப்படத்தில் முத்துராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக நோபியா மற்றும் ஸ்ரியா அறிமுகமாகிறார்கள். இவர்களுடன், நிழல்கள் ரவி, பாண்டு, மீரா கிருஷ்ணன், பெஞ்சமின், மாஸ்டர் கணேஷ், நமோ நாராயணன், காதல் அருண், கம்பம் மீனா, பசங்க செந்தி, முனிராஜ், செல்வம், பானுஷா, தங்கவேல் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தினை எழுதி இயக்குகிறார் இயக்குனர் புகழேந்திராஜ்.
இசையமைப்பாளர் விக்ரம் வர்மனின் இசையில் 4 பாடல்கள் இடம் பெறுகின்றன. பாடல்களை வைர பாரதி, கலைக்குமார், கோவை தனபால் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் ஒரு பாடலை இயக்குனர் புகழேந்திராஜ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பக்கலைஞர்கள்
எழுத்து- இயக்கம் : புகழேந்திராஜ்
ஒளிப்பதிவு: M.S.அண்ணாதுரை
இசை: விக்ரம் வர்மன்
பாடல்கள்: வைர பாரதி, கலைக்குமார், கோவைதனபால்,
எடிட்டிங்: K.தணிகாசலம்
நடனம்: அஜய்
கலை : சாய் குமார்
புகைப்படம் : பாவை வின்சென்ட்
தயாரிப்பு மேற்பார்வை: D.ஸ்ரீதரன்
மக்கள் தொடர்பு: S.செல்வரகு
தயாரிப்பு: P.முத்துராமலிங்கம்
கல்யாணத்திற்கு முன்னால் காதலிப்பது மட்டும் காதல் அல்ல. கல்யாணத்திற்குப் பின் காதலிப்பதுதான் உண்மையான காதல் என்பதை உணர்த்துவதுதான் ‘மணம் கொண்ட காதல்’ படத்தின் கதை.
‘மணம் கொண்ட காதல்’ படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, ஆலப்புழா, கொடைக்கானல், தேனி, கம்பம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.