சன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒளிபரப்பாகி வரும் ‘மகாபாரதம்’ தொடர், முதலாம் ஆண்டை முடித்துவிட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிகரமாக இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் பிரமாண்டமான அரங்கங்களும் அவ்வப்போது புது விஷயங்களை கலந்து கதை சொல்வதாலும் மற்றும் பரிச்சயமான தமிழ் நடிகர், நடிகைகள் நடிதிருப்பதாலும் ரசிகர்களிடம் இத்தொடர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நாற்பது லட்சம் ரூபாய் செலவில் கலை இயக்குனர் வசந்த்ராவ் குல்கர்னியால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கத்தில் திரௌபதி சுயம்வரம் நிகழ்ச்சியை பெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்குனர் ‘செங்கோட்டை’ சி.வி.சசிகுமார் இயக்கத்தில் நான்கு கேமராக்களை கொண்டு ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார் படமாக்கினார்.
வரும் வாரங்களில் ஒளிபரப்பாகவிருக்கும் திரௌபதியின் சுயம்வரம் மற்றும் அதைத் தொடர்ந்து பாண்டவர்கள் ஐவருடனான திருமணம் போன்றவற்றில் இடம் பெறும் பிரமாண்டம் மற்றும் திரௌபதியின் முற்பிறப்பு அதை தொடர்ந்து ஐவரை மணந்து கொள்ளும் திரௌபதியின் திருமணத்தில் மறைந்திருக்கும் ரகசியங்கள், சூட்சுமங்கள் முதலியவற்றை வியாசர் பெருமான் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா பகவான் தத்துவார்த்தமான ஆதாரங்களுடன் விளக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று தயாரிப்பாளர் சுனில் மேத்தா நம்பிக்கையோடு தெரிவித்தார்.
பூவிலங்கு மோகன், ஓ.எ.கே.சுந்தர், சாக்சி சிவா, கணேஷ்ராவ், ரமேஷ் பண்டிட், வெற்றிவேலன், சத்யா, ரவி பட், விஜய் கிருஷ்ணராஜ், திரௌபதியாக நிஷா, ருக்மணியாக நீலிமா, சுபத்திரையாக ஷாமிலி ஆகியோர் நடிக்கின்றனர்.
கதை ஆக்கம் – ஜெகதா
திரைக்கதை – அபிராம்
வசனம் – வேட்டை பெருமாள்
படத்தொகுப்பு – எஸ்.ரிச்சர்ட்
கிராபிக்ஸ் – பிரபுல்
இசை – தேனிசைத் தென்றல் தேவா
ஷெட்யூல் டைரக்டர் – எம்.பி.எஸ். சிவகுமார்
இயக்கம் மேற்பார்வை – செங்கோட்டை சி.வி.சசிகுமார்
இந்த பிரமாண்டமான நேரடி தமிழ் மகாபாரத தொடரை சினிவிஸ்டா சார்பில் சுனில் மேத்தா மற்றும் பிரேம்கிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.