விஜயா மருத்துவமனை மற்றும் விஜயா கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் வழங்கப்படும் ஸ்ரீநாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா இன்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த விருதினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு மற்றும் படக் குழுவினரான கலையரசன், ரித்விகா, இராமலிங்கன், முரளி, பிரவீன் ஆகியோர் சேர்ந்து பெற்றுக் கொண்டனர்.
இந்த விருது வழங்கும் விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம், மூத்த திரைப்பட நடிகை சரோஜா தேவி, மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த வசனகர்த்தா டாக்டர்.ஆரூர்தாஸ், தயாரிப்பாளர்கள் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.









