ஒரு இனிய அதிர்ச்சியான தகவல் ஒன்று சற்று நேரத்திற்கு முன்பு கிடைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்தை ஷங்கர் இயக்கப் போவதாகவும், இதில் விக்ரம் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போவதாகவும், படத்தின் பட்ஜெட் 250 கோடி என்றும், படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிககப் போவதாகவும் சமீபமாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இன்னொரு பக்கம்.. ஷங்கர் இல்லை. யாரோ ஒரு பெரிய இயக்குநரிடம் பேசி வருகிறார். முழுக்க முழுக்க காமெடி படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி எ்ன்றும் செய்திகள் வெளிவந்தன.
இப்போது கூடுதல் அதிர்ச்சியாக ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை இயக்குநர் ரஞ்சித்தும் உறுதிப்படுத்தியிருப்பதாக பிரபல சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியுள்ளார்.
இதன் தயாரிப்பாளர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான மிகப் பெரிய தயாரிப்பாளர்தானாம். அவர் யார் என்பதை மிக விரைவில் ரஜினியே தெரிவிப்பாராம்..! ஆனால் அந்தத் தயாரி்ப்பாளர் தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வரும் ஜூன் 15-ம் தேதி ஷூட்டிங் துவங்கி அடுத்த 2016 பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
இரண்டே படங்களை இயக்கிய நிலையில் சூப்பர்ஸ்டாரின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ள இயக்குநர் ரஞ்சித் நிச்சயம் அதிர்ஷ்டம் செய்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்..!
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..! மென்மேலும் உயரட்டும்..!









