full screen background image

‘மெட்ராஸ் மஹால்’ என்ற த்ரில்லர் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது..!

‘மெட்ராஸ் மஹால்’ என்ற த்ரில்லர் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது..!

BASAVA புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வினோத் நம்பியார், எஸ்.முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மெட்ராஸ் மஹால்’.

நான்கு புதுமுகங்கள் இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக நடிக்கவுள்ளனர். கதாநாயகியாக அக்ஷரா கார்த்திக் நடிக்கிறார். மற்றைய நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

துளசிராமன் இசையமைக்கிறார்.  ‘கிழக்கு வாசல்’, ‘பொண்ணு மணி’, ‘இதயம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அப்துல் ரஹ்மான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு மேற்பார்வை செய்து, படத்தில் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார்.

இயக்குநர் ஜீ.வி.சீனு இந்தப் படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் இதற்கு முன் பானு என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

 

Our Score