பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கவுள்ளனர்.
நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல பிரபலமான பல்வேறு மொழி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில் நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர்.
ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் அமேரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இந்த வருடமே படம் வெளியாகும் எனவும் தயாரிப்பாளர்களான T.G.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் இருவரும் அறிவித்துள்ளனர்.
கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.