full screen background image

மகனுக்காக குடும்பச் சொத்தை விற்று படமெடுத்த இயக்குநரின் பெற்றோர்..! 

மகனுக்காக குடும்பச் சொத்தை விற்று படமெடுத்த இயக்குநரின் பெற்றோர்..! 

அறிமுக இயக்குநரான கே.ஜே.சுரேந்தரின் ‘மாய பிம்பம்’ படத்தில் அனைவருமே புதுமுகம் என்பதால் அப்படத்தைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை.

அதனால் சோர்வடைந்த இயக்குநர் சுரேந்தரைப் பார்த்த அவரது பெற்றோர், தங்களது ஓய்வூதிய தொகை, அம்மாவின் நகைகள் மற்றும் அவர்களின் வாழ்நாள் சேமிப்புவரை அனைத்தையும் விற்று இப்படத்தைத் தயாரிக்கப் பணம் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநரின் பெற்றோர்களுக்கு படத்தின் கதையே தெரியாது. ஆனால், எப்படியும் தங்களது மகன் தவறான திரைப்படத்தை உருவாக்கமாட்டான் என்ற அதீத நம்பிக்கையில் இவ்வாறு உதவியிருக்கிறார்கள். 

director 4

படத்தை எடுத்து முடித்த பிறகு திரையில் பார்த்த அவரது பெற்றோர்களும், குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் மகிழ்ந்து இயக்குநர் கே.ஜே.சுரேந்தரை பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை – நந்தா, படத் தொகுப்பு – வினோத் சிவகுமார், கலை இயக்கம் – மார்ட்டின் தீட்ஸ், நடனம் – ஸ்ரீக்ரிஷ், ஒலி – ஷான்சவன், வடிவமைப்பு – சந்துரு, புகைப்படங்கள் – எட்வின் சகாய்.

அறிமுக இயக்குநரான கே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு ‘செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்’ சார்பில் தயாரித்துமிருக்கிறார்.

HERO AND HEROINE

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், பாண்டிராஜ், வெற்றி மாறன் போன்றவர்கள் படத்தைப் பார்த்து பிரமித்துள்ளார்கள். “காதலின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள்…” என்று இயக்குநரைப் பாராட்டியுள்ளார்கள்.

‘மாய பிம்பம்’ படத்தைப் பார்த்த இயக்குநர் சுசீந்திரனின் தம்பியான, தாய் சரவணன் இப்படத்தை வெளியிட உதவி செய்துள்ளார்.

வரும் ஜூலை மாதம் 2-ம் வாரத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

 

Our Score