விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12-வது படமான ‘மார்கன்’ ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
முன்னணி எடிட்டராக பாராட்டு பெற்ற லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.
முன்னதாக வெளியான “சொல்லிடுமா” சிங்கிள் பாடல் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, தீப்ஷிகா, ‘கலக்கப் போவது யாரு’ அர்ச்சனா, கனிமொழி, மற்றும் ‘அந்தகாரம்’ நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகனான அஜய் திஷான், இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். அவரது நடிப்பு தமிழ் திரையில் புதிய வில்லனாக ஒரு புதிய கட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவா S ஒளிப்பதிவாளராகவும், ராஜா.A கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
மும்பையில் படமாக்கப்பட்ட நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் VFX பணிகள் படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன.
ஜூன் 27 – உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் ‘மார்கன்’ திரைப்படத்தை தவறாமல் பாருங்கள்!









