ரேடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாஜிமோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த மாரி படத்தின் வெற்றி எதிர்பாராதது என்று தனுஷ் ரசிகர்களே சொல்கிறார்கள்.
‘வேலையில்லா பட்டதாரி’, ‘அநேகன்’ படங்களில் கிடைத்த வெற்றியினால் இந்தப் படமும் வெற்றிப் படமாகத்தான் இருக்கும் என்று நினைத்து வந்த ரசிகர் கூட்டத்தை முடிந்த அளவுக்கு இந்தப் படம் திருப்தி செய்திருப்பதால் இதைத் தொடர்ந்து எழுந்த மவுத் டாக் பரவலாக ‘நல்லாயிருக்கு’ என்று சொன்னதால் படம் ஹிட்டடித்திருக்கிறது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் ‘மாரி’ திரைப்படம் வசூலித்த தியேட்டர் கலெக்சனை பிரபல திரையுலக புள்ளி விபரப் புலியும், விநியோகஸ்தருமான ராமானுஜம் தெரிவித்துள்ளார். அதன்படி,
சென்னை – 1 கோடியே 80 லட்சம்
செங்கல்பட்டு – 3 கோடி
தென்னாற்காடு-வட ஆற்காடு – 1 கோடியே 50 லட்சம்
சேலம் – 1 கோடியே 30 லட்சம்
திருச்சி – 1 கோடியே 17 லட்சம்
மதுரை – 1 கோடியே 50 லட்சம்
கோவை – 2 கோடியே 50 லட்சம்
ஆக.. இந்த 3 நாட்களின் மாரி திரைப்படத்தி்ன் ஒட்டு மொத்த தமிழகத் தியேட்டர் வசூல் 13 கோடியே 45 லட்சம் ரூபாயைத் தொட்டிருக்கிறது.
இதற்கு மேல் தமிழகம் தவிர மற்ற உலகளாவிய இடங்களிலிருந்து வரும் வசூலையும் கணக்கிட்டால் ஒட்டு மொத்தமாக 25 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசூல் தனுஷின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பையும், வணிகத்தையும் அதிகரிக்க வைத்துள்ளது.