இயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி’.
இத்திரைப்படம் வெற்றியடைந்ததையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி-2’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது.
படம் துவங்கி ஒரு வருடமாகிய நிலையில் இப்போதுதான் படம் திரைக்கு வரவிருக்கிறது. ‘மாரி-2’ திரைப்படம் வருடம் டிசம்பர் 21-ம் தேதியன்று திரைக்கு வரவிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான தனுஷ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் டிரெயிலரும் நாளை வெளியாக இருக்கிறது எனவும் தனுஷ் அறிவித்துள்ளார்.
‘இந்த ‘மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடித்திருக்கிறார். மேலும், மலையாளத்தின் இப்போதைய முன்னணி இளம் நடிகரான டோவினா தாமஸும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மற்றும், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத், அஜய் கோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – பாலாஜி மோகன், இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சி – சில்வா, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின், நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார், தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ்.
இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த ‘ரௌடி பேபி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.