P.C.K. சக்திவேலின் ட்ரீம் ஜோன் மூவிஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘மாங்கா’.
இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார். மற்றும் லீமா, இளவரசு, ரேகா, மனோபாலா, தென்னவன், சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், லேடி ரஜினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இசை – பிரேம்ஜி
பாடல்கள் – கங்கைஅமரன், சினேகன்
ஒளிப்பதிவு – செல்வா.R.S
கலை – ஸ்ரீ
நடனம் – அஜய்ராஜ்
சண்டை பயிற்சி – செல்வா
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் – R.S.ராஜா
தயாரிப்பு – P.C.K.சக்திவேல்.
படம் பற்றி இயக்குனர் ராஜாவிடம் கேட்டோம் …..
“விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல… அப்படி அவர் கண்டு பிடிக்கும் பல விஷயங்கள் பலரது பார்வையில் விநோதமாக தெரிகிறது. ஒரு முறை அவர் பாகவதர் ஒருவரை சந்திக்கிறார். அவர் 1950-ம் ஆண்டு கால கட்டத்தை சேர்ந்தவர். இருவருக்கும் இடையே ஒரு நட்பு உண்டாகிறது. அந்த நட்பு நிலைத்ததா இல்லையா என்பதை காமெடி கலந்து சொல்கிறோம்.
படம் முழுவதும் காமெடிதான். பிரேம்ஜி நல்லாவே காமெடி பண்ணுவார். இதில் முழு ஹீரோ என்பதால் தூள் கிளப்பி இருக்கிறார். படத்தின் அனைத்துக் கட்ட வேலைகளும் முடிந்து விட்டன. விரைவில் இசை வெளியீட்டு விழா நடை பெறவுள்ளது…” என்றார் இயக்குனர்.