இயக்குநர் கிருஷ்ணாவின் அடுத்த படம் ‘மானே தேனே பேயே..!’

இயக்குநர் கிருஷ்ணாவின் அடுத்த படம் ‘மானே தேனே பேயே..!’

கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தற்போது G.V.பிரகாஷ் – ஸ்ரீதிவ்யா சாரிக் நடிக்க மணி நாகராஜ் இயக்கத்தில் ‘பென்சில்’ என்ற படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஆரி கதாநாயகனாக நடிக்கும் ‘மானே தேனே பேயே’ என்ற படத்தையும் இந்நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.

‘நெடுஞ்சாலை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிருஷ்ணா-ஆரி இணையும் படம் இது. இதில் கதாநாயகியாக பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மற்றும் சென்ராயன், மதுமிதா ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கிறார்கள்.

வசனம் – ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன்

ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு

பாடல்கள் – யுகபாரதி, விவேகா, இயக்குனர் கிருஷ்ணா

நடனம் – நோபல்

இசை – C.சத்யா

கதை, திரைக்கதை, இயக்கம் – கிருஷ்ணா

தயாரிப்பு – கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட்

படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

“ஏற்கெனவே நான் இயக்கிய ‘சில்லுனு ஒரு காதல்’ காதல் கலந்த குடும்பப் படம். ‘நெடுஞ்சாலை’ படமோ நெடுஞ்சாலைகளில் நடக்கும் சம்பவங்கள்… ஆனால் இப்போது நான் இயக்கவிருக்கும் இந்த ‘மானே தேனே பேயே’ படம், முந்தைய இரண்டு படங்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

காமெடி கலந்து காதலை சொல்லும் படம் இது. இன்றைய இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கேற்ற படமாகவும் இது இருக்கும். இந்த படத்திற்காக கானாபாலா பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. சென்னை, அமெரிக்கா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று ஒரே கட்டத்தில் முடிவடைய இருக்கிறது..” என்றார்.

Our Score