full screen background image

‘கோமாளி’ இயக்குநர் பிரதீப் ஹீரோவாக நடிக்கும் ‘லவ் டுடே’ படத்தின் டிரெயிலர் வெளியானது

‘கோமாளி’ இயக்குநர் பிரதீப் ஹீரோவாக நடிக்கும் ‘லவ் டுடே’ படத்தின் டிரெயிலர் வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘கோமாளி’ பட இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாக நடிக்கும், குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய கலகலப்பான பொழுது போக்கு திரைப்படமான ‘லவ் டுடே’ படத்தின் டிரெயிலரை நடிகர் சிம்பு இன்று வெளியிட்டார்.

இப்படத்தை ‘கோமாளி’ படத்தை இயக்கிய இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ.ராகவ் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்.கே.டி., கையாண்டுள்ளார். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம்.வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகிறார்.

“அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுது போக்கு படமாக இந்த ‘லவ் டுடே’ படம் இருக்கும்.  மேலும், இன்றைய காதல் மற்றும் 2-கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’  ஈர்க்கும்” என்று படக் குழு கூறுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று வெளியான டிரெயிலரும் அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘லவ் டுடே’ என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அந்தப் படத்தில் நாயகனாக நடித்திருந்த நடிகர் விஜய்க்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் நவம்பர் 4-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Our Score