full screen background image

நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ் நடிக்கும் ‘லாலி லாலி ஆராரோ’

நடிகர் சரண்ராஜின் மகன்  தேஜ் சரண்ராஜ் நடிக்கும் ‘லாலி லாலி ஆராரோ’

ஆறுபடை மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘லாலி லாலி ஆராரோ.’ 

இந்த படத்தில் பிரபல நடிகர்  சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.  நாயகியாக ஷிவானி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் மனோபாலா, லஷ்மி பிரியா மேனன், ஷினாஜ், ஜீவாரவி, விஜய் டிவி புகழ் திவாகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்  கிருஷ்ணகுமார் வில்லனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு  –  நாகபூஷன், இசை – ராமகோபால கிருஷ்ணன், பாடல்கள் –  ராஜகனி, படத் தொகுப்பு – ஆனந்த்.ஆர்.ஜி, நடனம் – ராபர்ட் சுரேஷ், சண்டை பயிற்சி – ஓம்பிரகாஷ், கலை இயக்கம் – மகிரங்கி, தயாரிப்பு  மேற்பார்வை – ஷியாம் சரஸ், இணை தயாரிப்பு   –  மஞ்சுநாத். MRL ,ரவிகுமார், S.V.K.பிரதர்ஸ், C.தேவேந்திர ராஜா, தயாரிப்பு   –   ஆறு படையப்பன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  லிங்கன் ராஜாளி.

படம் பற்றி இயக்குநர் லிங்கன் ராஜாளி பேசும்போது, “அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி. அதேபோல் தன் மகனைவிட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்ற நினைப்பில் உள்ள அம்மா. இவர்களுக்கு இடையில் காதலியாக, மதுரா உள்ளே வர அதை அந்த குடும்பம் எப்படி எதிர் கொள்கிறது என்பது ஒரு டிராக்.

மறுபுறம்  தன் மகள்தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு தகப்பன். தகப்பனை தவிர உலகத்தில் உயர்ந்தது இல்லை என்று வாழும் மகள். இவர்களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர, அதை எப்படி ஹீரோயினின் குடும்பம் எதிர்கொள்கிறது என்பதும்தான் இந்த படத்தின் கதை..!

செண்டிமெண்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கி உள்ளோம். படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், மற்றும் கேரளா பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற உள்ளது..” என்றார்.

Our Score