இந்தப் படத்துல பெரிய பெயர் கிடைக்கப் போகுது – லிங்குசாமியின் நம்பிக்கை..!

இந்தப் படத்துல பெரிய பெயர் கிடைக்கப் போகுது – லிங்குசாமியின் நம்பிக்கை..!

இயக்குநர் சந்தோஷ்சிவன் லிங்குசாமி பற்றி ஒரு பக்கம் உருகிக் கொண்டிருக்க.. லிங்குசாமியோ இன்னொரு பக்கம் இனம் படம் பற்றி உருகித் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி, “உங்களை இந்தப் படத்துக்காக சந்திக்கிறதை ஒரு பெரிய கவுரவமாவும், கர்வமாவும் நினைக்கிறேன். நான் சந்தோஷ்சிவன் ஸாரோட பெரிய ஃபேன். அவரோட ‘தளபதி’, ‘தில்சே’, ‘உயிரே’ படம் பார்த்து அசந்துட்டேன்.

அப்போவெல்லாம் அஸிஸ்டெண்ட் இயக்குநர்கள் படம் பண்ணா டெக்னீஷியன்னு யார்ன்னு ச்சும்மா எழுதி வைச்சிருப்போம். அதுல கேமிரான்னு போட்டிருந்தா அதுக்குக் கீழே பி.சி.ஸ்ரீராம் இல்லாட்டி சந்தோஷ்சிவன் பெயர்தான் இருக்கும்..

நான் 1992-ல சென்னைக்கு வந்தேன். அப்ப இருந்தே சந்தோஷ்சிவன்கூட ஒரு படத்திலேயாவது வேலை பார்த்திட மாட்டோமான்னு ஒரு பெரிய கனவே இருந்துச்சு. அது இப்பவும் தொடருது. அவர் எப்போ கேமிராவை கைல தூக்கினாலும் அது பெரிய மேஜிக் மாதிரிதான் இருக்கும்..

அவரை ‘அஞ்சான்’ படத்துல ஒர்க் பண்றதுக்காக கேட்டேன். அப்போ அவர் நான் ‘இனம்’னு ஒரு படம் பண்றதுக்காகப் போறேன்னு சொன்னாங்க. ஆனா இப்போ ரெண்டுமே நடந்திருக்கு.. ‘அஞ்சான்’ படத்துல கேமராமேனாவும் ஒர்க் பண்றாங்க. அவரோட ‘இனம்’ படத்தை ரிலீஸ் பண்றதுக்கான வாய்ப்பும் எனக்குக் கெடைச்சிருக்கு.

ஸார் என்னைக் கூப்பிட்டு படத்தைப் போட்டுக் காண்பிச்சாங்க. படத்தைப் பார்த்தேன். என் கம்பெனி மூலமா ‘பையா’, ‘வழக்கு எண்’, ‘கோலி சோடா’ படமெல்லாம் ரிலீஸ் ஆகியிருக்கு. நீங்களும் பார்த்திருக்கீங்க.. இந்தப் படத்தை நான் எந்தக் கணக்கும் பார்த்து வாங்கல. படம் பார்த்தேன். என்னை பாதிச்சது, இது ஓடுமா? ஓடாதா? இது என்ன செய்யும்? அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு இருக்கிற மாதிரியான இதயம்தான் எல்லாருக்கும் இருக்கும்னு நம்புறேன். கண்ணீர் லேசா கலங்கும், முட்டும், சந்தோஷப்படுத்தும். யுத்தக் களத்தில் இருக்கக்கூடிய அந்த சூழலை, நூறு பிரசண்ட் அப்படியே கிரியேட் பண்ணிருக்காங்க.. அதுக்காகவே நம்ம திருப்பதி பிரதர்ஸ் கம்பெனி மூலமா இந்தப் படத்தை ரிலீஸ் பண்றோம். இதுவரைக்கும் எங்க கம்பெனி மூலமா வந்த மொத்த பெயரும் இந்த ஒரு படத்துல எனக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு.. அந்த அளவுக்கு செஞ்சிருக்காங்க..

இந்தப் படத்துல ஒரு பையன் நடிச்சிருக்கான். இப்போ இங்க இருக்குற நடிகர்கள்ல அந்தப் பையனோட கேரக்டரை செஞ்சிருக்காங்க. ஆனா இப்போ அவங்களும் அந்தப் பையனோட நடிப்பை பார்த்தாங்கன்னா நிச்சயம் சல்யூட் செய்வாங்க. அந்த அளவுக்கு மெனக்கெடலை மேக்கிங்ல பார்த்தேன்..! இந்தப் படம் சந்தோஷ்சிவன் சாரோட கேரியர்ல் மிக முக்கிய படமா இருக்கும்” என்றார்.

ஓகே.. இதுக்கு மேல நாங்களும் எதுவும் கேட்க முடியாது.. படத்தைப் பார்த்திட்டே பேசுறோம்..!

Our Score