அண்ணாமலை தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் A.சரவணன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க.’
இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி, நாடோடிகள் கோபால், கோதண்டம், பரோட்டா முருகேஷ், ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பாலா, இசை மற்றும் பாடல்கள் – செளந்தர்யன், கலை –தேவராஜ், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா. தயாரிப்பு மேற்பார்வை – சாட்டை N.சண்முகசுந்தரம், j.பாரதிராஜா, தயாரிப்பு-அருணாசலம் தியேட்டர்ஸ் A.சரவணன், எழுத்து, இயக்கம் – சு.சத்தியசீலன்.
படம் பற்றி இயக்குநர் சு.சத்தியசீலன் பேசும்போது, “இது முழுக்க முழுக்க பேமிலி காமெடி சப்ஜெக்ட். இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பதுதான் எங்களது நோக்கம்.
தயாரிப்பாளர் சரவணன் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள்..? என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள்..? என்ன மாதிரியான படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்..? என்பது அவருக்கு அத்துப்படி.
அப்படிப்பட்ட சரவணன் ஸார் தேர்ந்தெடுத்த கதைதான் இந்த ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ கதை. அந்த குடும்பத்தை பார்ப்பதே தப்பு என்று இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிற பகை…
அப்படிப்பட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்த பையனும் பெண்ணும் காதலித்தால் என்ன ஆகும். முந்தைய தலைமுறை மோதிக் கொள்ள, அடுத்த தலைமுறையினர் காதல் கொள்வது என்பது எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பதுதான் திரைக்கதை.
படப்பிடிப்பு முழுவதும் ஈரோடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் நடைபெற்றுள்ளது…” என்றார் இயக்குநர் சு.சத்தியசீலன்.









