என்ன ஆச்சுன்னு தெரியலை ‘கல்யாண சமையல் சாதம்’ ஹீரோயின் லேகா வாஷிங்டனுக்கு..! பாலிவுட்டின் மிகப் பெரிய இயக்குநரான ராஜ்குமார் சந்தோஷியின் ‘பவர்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்கப் போகும் சந்தோஷத்தில் இருப்பாரென்று பார்த்தால், புலம்பித் தள்ளியிருக்கிறார் ‘குமுதத்தில்’.
“தமிழ்ல ஹீரோயினா இருக்குறது ரொம்பக் கஷ்டம். இதுக்கு விளக்கமெல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு அவசியமில்லை. நான் எதச் சொல்றேன்னு உங்களுக்குப் புரியாதா..? இல்ல தெரியாதா..? சினிமா இண்டஸ்ட்ரி இப்பவும் ஒண்ணும் புல் அண்ட் புல்லா மாறிடலை.. பெண்கள் விஷயத்துல இன்னும் அப்படியேதான் இருக்கு.. அதை சில நடிகைகள் வெளிப்படையா சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க. அவங்க பேச்சு, பலர் காதுக்கு கேட்காம வேணும்னா இருக்கலாம்…” என்று சொல்லியிருக்கிறார் லேகா.
இப்போ இவங்க சொல்றது எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறோம். இப்படியே மறைமுகமாகவே எத்தனை பேர்.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு சொல்லிக்கிட்டே இருக்கப் போறீங்க..? யாராச்சும் ஒருத்தர் கொளுத்திப் போடுங்கம்மா..!
நன்றி : குமுதம்