11-ம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டார் லஷ்மி மேனன். அடுத்து வரும் பள்ளி ஆண்டு விடுமுறையில் முடிக்கப்படாமல் இருக்கும் படங்களை முடித்துவிட்டு மீண்டும் சமர்த்து பிள்ளையாக 12-ம் வகுப்பு படிக்க பள்ளிக்குச் சென்றுவிடுவார். அப்படியே கூடவே அடுத்தடுத்து வரும் படங்களையும் ஒத்துக் கொண்டு பள்ளிக்கு கட் அடித்துவிட்டு நடிக்கவும் செய்வார். இவ்வளவையும் செய்ய மனம் இருந்தால் மட்டும் போதாது.. கடவுள் துணையும் வேண்டுமல்லவா..?
எல்லாவற்றையும் ஒரு வேண்டுதலாக வைத்து இன்று பழனிக்கு படையெடு்தது வந்து முருகனை சந்தித்து ஆசி பெற்றவர்.. முந்தைய ஆண்டுகளில் நடித்த படங்கள் வெற்றி பெற வேண்டும் எ்ன்ற பிரார்த்தனைக்கு பதில் நன்றிக் கடனாக முருகனுக்கு தங்க ரதத்தையும் புக் செய்து அதனையும் இழுத்து நேர்த்திக் கடனை நிறைவு செய்துள்ளார்.
ஒரு நடிகை.. அதிலும் பழனிக்கு.. முருகனை பார்க்க வந்திருப்பதையறிந்து நிருபர்கள் போகாமல் இருப்பார்களா..? சென்றவர்களிடத்தில் லஷ்மி மேனன் பேசுகையில், “கடந்த வருடம் நான் பழனிக்கு வந்தபோது ‘கும்கி’ படத்தில் நடித்து கொண்டிருந்தேன். முருகனை தரிசித்தபோது ‘நான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும். தமிழ், மலையாள பட உலகில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். மேலும் அடுத்த முறை வரும்போது தங்க ரதம் இழுப்பதாகவும் வேண்டிக் கொண்டேன். பழனி முருகன் அருளால் இப்போது நான் நல்லபடியா வளர்ந்து வருகிறேன். என்னுடைய படங்களும் வெற்றி பெற்றுள்ளன. எனவே எனது வேண்டுதலை நிறைவேற்ற இப்போது பழனிக்கு வந்து தங்கரதம் இழுத்து முருகனை வழிபாடு செய்தேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு படத்தின் வெற்றிக்காக அதில் நடித்த நடிகை பழனிக்கு சென்று தங்க ரதம் இழுக்கும்போது அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட இயக்குநர், நடிகரெல்லாம் அட்லீஸ்ட் வெள்ளி ரதத்தையாவது புக் செய்து இழுக்க வேண்டாமா..?
யாராச்சும் சொல்லுங்கப்பா..!