கேரளத்து அழகி லட்சுமி மேனன் இன்றைக்கு மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்.
அவர் நடித்த இரண்டு முக்கியமான படங்களும் அடுத்தடுத்த மாநிலங்களில் ஒரே நாளில் வெளியாவதுதான் அவரது சந்தோஷத்திற்குக் காரணம்..!
கேரளாவில் ஹிட் இயக்குநர் ஜோஷியின் இயக்கத்தில் திலீப் ஜோடியாக லட்சுமி நடித்த ‘அவதாரம்’ இன்றைக்குத்தான் ரிலீஸாகியிருக்கிறது.
அதே நேரம் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சித்தார்த் ஜோடியாக லட்சுமி நடித்த ‘ஜிகர்தண்டா’வும் இன்றைக்குத்தான் ரிலீஸாகியிருக்கிறது.
இரண்டுமே மிக முக்கியமான படங்கள் என்பதுதான் அவரது சந்தோஷத்திற்குக் காரணம்..
இது குறித்து பேட்டியளித்துள்ள லட்சுமி மேனன், “இன்று வெளியாகும் இந்த இரண்டு படங்களிலும் நான் ஒப்பந்தமானபோதே எனக்கு பிளஸ்டூ கிளாஸ் இருக்குன்னு சொல்லிட்டேன்.. அப்போது உனக்கு எப்போ ஸ்கூல் இல்லாத தேதிகள் கிடைக்குமோ அன்னிக்கே நாங்க படப்பிடிப்பை வைச்சுக்குறோம்னு இரண்டு இயக்குநர்களுமே சொன்னாங்க. அது மாதிரியே எனக்கு கிடைச்ச லீவு நாள்ல மட்டும்தான் இந்த இரண்டு படங்கள்லேயும் நடிச்சேன்..
அவங்க கொடுத்த ஒத்துழைப்புனாலதான் இந்த படங்கள்ல நடிக்கவே முடிஞ்சது.. சித்தார்த், திலீப் ரெண்டு பேருமே என்னோட சீனியர்ஸ்.. அதுனால அவங்களோட நடிச்சதுல எனக்கும் பெரிய எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சது.. இப்போ இந்த ரெண்டு படமுமே ஒரே நாள்ல ரிலீஸாகுறது எனக்கு செம திரில்.. ரெண்டுமே ஜெயிக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டிருக்கேன்..” என்றார்.
கிடைச்ச லீவைகூட வேஸ்ட் பண்ணாம உழைச்சிருக்குன்னா இந்தப் புள்ள கண்டிப்பா பொழைச்சுக்கும்..!