full screen background image

ஜிம்பாப்வே பிலிம் பெஸ்டிவலுக்கு தேர்வாகியிருக்கும் ‘குற்றம் கடிதல்’ தமிழ்ப் படம்..!

ஜிம்பாப்வே பிலிம் பெஸ்டிவலுக்கு தேர்வாகியிருக்கும் ‘குற்றம் கடிதல்’ தமிழ்ப் படம்..!

“தரமான படங்களை தயாரித்து வெளியிடும் நிறுவனம் என்று எனது நிறுவனம் பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தீவிரமான குறிக்கோள்…” என்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார். அவரது நிறுவனமான ஜே.எஸ்.கே.பிலிம் கார்பரேஷன் அடுத்து தயாரித்து வெளியிடும் படமான ‘குற்றம் கடிதல்’, அவரது நிறுவனத்துக்கு மேலும் புகழ் பெற்று தரும் என உறுதியாக நம்புகிறார் சதீஷ்குமார்.

திறமையான இளைஞர்களின் சங்கமமாக இருக்கும் ‘குற்றம் கடிதல்’ பட குழுவினருக்கு திரை உலகில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். முற்றிலும் புதியவர்கள் நடிக்கும் இந்த படம் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெயர் ஈட்டி தரும் என்பதில் ஐயமில்லை. ஜிம்பாப்வே தலைநகரமான உகாண்டாவில் 14-வது ஜிம்பாப்வே பிலிம் பெஸ்டிவல் இந்த மாதம் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இத்திரைப்பட விழாவில் ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

மும்பையில் இந்த மாதம் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்க உள்ள 16-வது திரைப்பட விழாவில் ‘இந்திய திரை அரங்கில் புதிய முகங்கள்’ என்ற தகுதியின் கீழ் ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. தமிழ்ப் படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஆரண்ய காண்டம்’ ஆகிய படங்களுக்கு அடுத்து ‘குற்றம் கடிதல்’ படம்தான் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரியான திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரம், ரசிகர்கள் மத்தியில் அந்தப் படம் பற்றிய ஒரு வலுவான கருத்து உருவாக பெரிதளவு உதவும். விளம்பரங்கள் மிக மிக அவசியம் என கருதப்படும் இந்த கால கட்டத்தில் இது அவசியமானதும்கூட.

‘குற்றம் கடிதல்’ படத்தின் அறிமுக இயக்குனர் பிரம்மா.G படம் பற்றி கூறும்போது, “கடிதல் என்றால் கண்டித்தல்.. அல்லது கடிந்து கொள்ளுதல் என பொருள். ஐந்து பல்வேறு வழக்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்க்கை… அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம்… அதன் அடிப்படையில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதைதான் ‘குற்றம் கடிதல்’. என்னுடைய இந்த கருத்தை படமாக்க உதவிய எனது தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமாருக்கும், கிரிஸ் பிக்சர்ஸ் கிறிஸ்டி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..” என்றார்.

Our Score