full screen background image

கோவா பிலிம் பெஸ்டிவலில் ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு பெரும் வரவேற்பு..!

கோவா பிலிம் பெஸ்டிவலில் ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு பெரும் வரவேற்பு..!

பல்வேறு பட விழாக்களில் கலந்து கொண்டு ‘சிறந்த படம்’ என்ற அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு கோவாவில் நடந்த 45-வது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.

FullSizeRender

இதற்காகவே ‘குற்றம் கடிதல்’ படத்தின் இயக்குனர் பிரம்மா.ஜி. தயாரிப்பாளர் ஜே.எஸ்கே., மற்றும் பட குழுவினர் கோவாவுக்கு சென்று இருந்தனர். பிரத்தியேகமான சில படங்களுக்கு மட்டுமே கிடைத்த அந்த வரவேற்பில் ‘குற்றம் கடிதல் ‘ படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடமும் ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்துக்காக இதே நிறுவனம் இந்த அந்தஸ்தை பெற்றது நினைவிருக்கலாம்.

IMG_0900(1)

“தொடர்ந்து இரண்டாவது வருடமாக நான் தயாரித்த படங்கள் இந்த மரியாதைக்கான சிறப்பு வளையத்தில் வருவது எனக்கு மிக்க பெருமை. முன்னரே தெரிவித்தது போலவே இந்த பெருமை நல்ல தரமான தமிழ் படங்கள் வர உழைக்கும் எல்லோருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்” என்கிறார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

Our Score