ஸ்ரீலஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் M.தியாகராஜன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘குத்தூசி’.
இந்தப் படத்தில் ‘வத்திகுச்சி’ திலீபன் ஹீரோவாகவும், அறிமுக நடிகை அமலா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, ‘ஆடுகளம்’ ஜெயபாலன் ஆகியோரும் நடித்திருக்கும் இப்படத்தில் அந்தோணி என்னும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார்.
இசை – N.கண்ணன், ஒளிப்பதிவு – பாஹி, பாடல்கள் -கவிஞர் அண்ணாமலை, படத் தொகுப்பு – J.V.மணிகண்ட பாலாஜி, கலை – ஸ்ரீஜெய் கல்யாண், வசனம் – வீரு சரண், சண்டை காட்சிகள் – ராஜசேகர், நடனம் – ராதிகா, சங்கர், இணை தயாரிப்பாளர் – த.கணேஷ் ராஜா. எழுத்து, இயக்கம் – சிவசக்தி.
நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என்பதை உலக நாடுகள் அறியும். அந்த விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார் என்பதுதான் இந்தக் ‘குத்தூசி’ படத்தின் கதை.
இதுவரை தமிழ்ச் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த ‘குத்தூசி’ திரைப்படம் முதல்முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும்விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.
தற்போது இயற்கை விவசாயம் என்பது அரிதாகிவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும் படத்தில் கூறியிருக்கிறார் இயக்குநர் சிவசக்தி.
காதல், ஆக்ஷன், எமோஷன் என கமர்ஷியலாகவும் மக்களுக்கு பிடிக்கும் வகையாக இந்தக் ‘குத்தூசி’ திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலை பகுதி மற்றும் சென்னையில் மொத்தம் 54 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.