சாலை விபத்து பற்றிய புதுமையான கதையைச் சொல்ல வரும் ‘குஸ்கா’ திரைப்படம்

சாலை விபத்து பற்றிய புதுமையான கதையைச் சொல்ல வரும் ‘குஸ்கா’ திரைப்படம்

எஃப்.எம்.கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.நாராயணன் மற்றும் எஸ்.சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘குஸ்கா’.

இந்தப் படத்தில் நாயகனாக கிஷோர் அறிமுகமாக, நாயகியாக சஸ்வதா நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், ரேகா, மயில்சாமி, அப்புக்குட்டி, டி.பி.கஜேந்திரன், அனு மோகன், மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கல் ராவ், முல்லை தனசேகர், கோதண்டம், அம்பானி சங்கர், சேலம் சுமதி, அண்ணாதுரை கண்ணதாசன், மற்றும் படத்தின் இயக்குநரான கிருஷ்ணா உட்பட பலர் நடித்திருகின்றனர். வில்லனாக ஜெரால்டு நடித்திருக்கிறார்.

kuskha movie stills

தயாரிப்பு நிறுவனம் – எஃப்.எம்.கலைக்கூடம்,  தயாரிப்பாளர்கள் – எஸ்.நாராயணன், எஸ்.சரவணக்குமார், கதை-திரைக்கதை – வசனம் – பாடல்கள் – இசை – இயக்கம் – பி.என்.சி.கிருஷ்ணா, நிர்வாகத் தயாரிப்பு – கே.என்.ஆர்.சாமி, ஒளிப்பதிவு – எம்.எஸ்.ராஜா, படத் தொகுப்பு – ஆர்.ஜி.ஆனந்த், பாடல்கள் – பி.என்.சி.கிருஷ்ணா, கலை இயக்கம் – கே. கலை நடராஜ், சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், புகைப்படங்கள் – கே.பி.பிரபு, நடன இயக்கம் – ஜே.ஜே.சந்துரு, போஸ்டர் வடிவமைப்பு – கம்பம் சங்கர், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான பி.என்.சி.கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இவர் ஒரு பன்முகப்பட்ட கலைஞர், இயக்குநர் மற்றும் நடிகர். தனது திரைத்துறைப் பயணத்தை நாடக மேடைகளில் துவங்கி, திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும், இயங்கி வருகின்ற ஒரு படைப்பாளி.

kuskha movie stills

படம் பற்றிப் பேசிய இயக்குநர் கிருஷ்ணா, “இந்தக் ‘குஸ்கா’ திரைப்படம், ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குநர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இதுவரையிலும் சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது..” என்றார்.

Our Score