எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
பாடலை வெளியிட்டு பேசிய நடிகர் விஜய், “எனக்கு படவுலகில் ‘குஷி’ பட ரிலீஸுக்கு முன்பு வாழ்வா, சாவா என்கிற நிலைமை இருந்தது. இந்தப் படமும் ஓடவில்லை என்றால் எனது சினிமா வாழ்க்கை என்னாகும் என்ற கேள்வியும் அப்போது இருந்தது.
அந்த நேரத்தில்தான் ‘குஷி’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா சார். இப்போது அதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘குஷி’ ரீலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார் ‘எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள்? படத்துல என்ன இருக்கு.. கதையே இல்லையே..?’ என்றார். ‘சரிதான் ஸார். ஆனால் எஸ்.ஜே..சூர்யான்னு ஒருத்தர் படத்துல இருக்காரு’ன்னு சொன்னேன்.
சூர்யா ஸார் கதை சொல்லிக் கேட்கணும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். ‘நண்பன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த ‘இசை’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்று பாராட்டினார்.