இறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..! 

இறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..! 

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திரு.T.முருகானந்தம் தயாரித்துள்ள முதல் திரைப்படம் ‘குருதி ஆட்டம்’.

இந்தப் படத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். எட்டு தோட்டாக்கள் புகழ் ஶ்ரீகணேஷ் இயக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகள் மிக சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் பேசும்போது, "தயாரிப்பாளர் T. முருகானந்தம் படத்தின் துவக்கத்தில் இந்த “குருதி ஆட்டம்” படத்தின் திரைக்கதையின் மீதும், என் மீதும் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நான் என்றும் மறக்க மாட்டேன்.

அவரிடம் நான் திரைக்கதை சொல்ல, செல்லும் முன்னரே என் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார் அவர். நான் இயக்கியிருந்த '8 தோட்டாக்கள்' படத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார்.

ஆனால், ஒரு தயாரிப்பாளராக எந்த ஒரு சிறு விசயத்திலும் தலையிடாமல், படைப்பில் எனக்கு முழு   சுதந்திரம் தந்தார். இது எனக்கு பெரும் பொறுப்புணர்வை தந்தது. நான் படத்தை மேலும் மேலும் வெகு கவனமுடன் உருவாக்க இதுவே காரணம்.

மேலும், இப்படத்தின் நாயகன் அதர்வா ஒரு மிகச் சிறந்த நடிகர். எனக்கு தொடர்ந்து உற்சாகம் தந்து, நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தார். அவர் ஒரு சகோதரர் போலத்தான் என்னிடம்  நடந்து கொண்டார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் படத்தின் இசை, டிரெய்லர், பட வெளியீடு குறித்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும்.." என்றார்.