full screen background image

இளைஞர்களின் நட்பை மையப்படுத்தி உருவாகும் ‘கும்பாரி’ திரைப்படம்

இளைஞர்களின் நட்பை மையப்படுத்தி உருவாகும் ‘கும்பாரி’ திரைப்படம்

ராயல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குமாரதாஸ் தயாரித்துள்ள படம் ‘கும்பாரி’.

இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான் விஜய், ‘பருத்தி வீரன்’ சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, ‘காதல்’ சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்ப – குமாரதாஸ், எழுத்து, இயக்கம் – கெவின் ஜோசப், இசை – ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி, படத் தொகுப்பு – T.S.ஜெய், ஒளிப்பதிவு – பிரசாத் ஆறுமுகம், சண்டை பயிற்சி இயக்கம் – மிராக்கிள்’ மைக்கேல், நடனப் பயிற்சி இயக்கம் – ராஜு முருகன், பாடகர்கள் – அந்தோணிதாசன், ஐஸ்வர்யா, சாய்சரண், பாடலாசிரியர்கள் – வினோதன், அருண்பாரதி, சீர்காழி சிற்பி, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் K.அஹ்மத்.

இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கும்பாரி’ பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023 பொங்கலுக்கு பிறகு படத்தை திரையிடும்விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Our Score