மம்முட்டி – ராஜ்கிரண் – மீனா கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..!

மம்முட்டி – ராஜ்கிரண் – மீனா கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..!

மலையாள சினிமாவின் மெகா ஸ்டாரான மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோரின் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘குபேரன்’.

நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக காலடியெடுத்து வைத்துள்ளார்.

தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து இருக்கிறார்.

Shylock-malayalam-movie-Pooja-photos-1

‘என் ராசாவின் மனசிலே’, ‘பாசமுள்ள பாண்டியரே’ படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும், மீனாவும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

‘2.0’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன், ஜான் விஜய் ஆகியோர் இந்தப்படத்தில் வில்லன்களாக நடிக்க, முக்கிய வேடங்களில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புகழ் நடிகை அர்த்தனா பினு, நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், மாரி முத்து &  சித்திக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இயக்குநர் அஜய் வாசுதேவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டியை வைத்து மலையாளத்தில் ‘ராஜாதி ராஜா’ மற்றும் ‘மாஸ்டர் பீஸ்’ என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அஜய் வாசுதேவ்.

மலையாளத்தில் இந்தப் படத்திற்கு ‘ஷைலாக்’(Shylock) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

RKS04422-New

இந்த படத்தின் கதையை பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய கதாசிரியர்கள் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். தமிழுக்கு ராஜ்கிரணே வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் ‘தோழா’, ‘பெங்களூரு நாட்கள்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் பாடல்களை ராஜ்கிரண், விவேகா இருவரும் எழுதியுள்ளனர்.  பல படங்களை ராஜ்கிரண்  இயக்கி இருந்தாலும் ஒரு படத்தில் பாடல் எழுதுவது இதுவே முதன் முறையாகும்.

இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ‘ராசாவே உன்னை நம்பி’, ‘என்ன பெத்த ராசா’, ‘என் ராசாவின் மனசிலே’, ‘அரண்மனைக் கிளி’, ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய வெள்ளி விழா படங்களை வெளியிட்டு இருக்கிறது.

இந்த ‘குபேரன்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

Our Score