தன் சொந்தக் கதையில் தானே நாயகனாக  நடித்திருக்கும் நடிகர்

தன் சொந்தக் கதையில் தானே நாயகனாக  நடித்திருக்கும் நடிகர்

PNP CINEMAS தயாரிப்பில் தயாரிப்பாளர் பி.என்.பல்ராம் தயாரித்துள்ள படம் ‘கிருஷ்ணம்’.

இந்தப் படத்தில் நாயகனாக  அக்சய் கிருஷ்ணன் நடித்துள்ளார். நாயகிகளாக அஸ்வரியா, மமிதா பஜ்ஜு ஆகியோர் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியாகும்  இந்தப் படத்திற்கு  ஹரி நாராயணன் இசையமைத்துள்ளார். பாடல்களை சந்தியா எழுதியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் தினேஷ் பாபு.  

படத்தின் இயக்குநர் தினேஷ் பாபு  ஒளிப்பதிவாளராக பல வருடங்கள்  மலையாளத்திலும், கன்னடத்திலும்  பணியாற்றியவர்.

வித்தியாசமான  கதைக் களத்துடன் இந்த ‘கிருஷ்ணம்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தக் கதை  ஒரு ஒரு இளைஞனின் வாழ்க்கையில்  நடந்த உண்மை சம்பவம். இந்த படத்தின் நாயகன் கேரக்டருக்கு பல இளைஞர்களை பார்த்தும் யாருமே பொருத்தமானவர்களாக  அமையவில்லையாம். கடைசியில் எந்த  இளைஞனின் கதையை படமாக்க நினைத்தாரோ  அவரையே கதாநாயகனாக்கி படத்தை இயக்கி முடித்துவிட்டார்.

நாயகன் அக்சய் கிருஷ்ணனுக்கு உண்மையில் தான் சிரித்த, அழுத நாட்களை இந்தச் சினிமாவுக்காக  மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்து கேமரா முன்னால் நடித்தது பெரும் சவாலாக  இருந்ததாம். தன்னுடைய சொந்தக் கதை என்பதாலேயே இயக்குநர் சொல்லிக் கொடுக்காமலேயே, சில காடசிகளில் மிக தத்ருபமாக  நடித்தாராம்.

உண்மை சம்பவத்தில் வாழ்ந்தவர்களை  சினிமாவுக்காக  மீண்டும் ஒருமுறை கேமரா முன்பு நடிக்க வைப்பது என்பது  பெரும் சவால்.  அதை தான் சிறப்பாக செய்திருப்பதாக கூறுகிறார் இயக்குநர் தினேஷ் பாபு.

Our Score