‘கற்றது களவு’, ‘அலிபாபா’, ‘கழுகு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் கிருஷ்ணா இவர் தற்பொழுது திரைக்கு வர உள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதை தவிர ‘விழித்திரு’, ‘இல்ல ஆனாலும் இருக்கு’, ‘வன்மம்’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் கிருஷ்ணா.
இவர் பிரபல தயாரிப்பாளர்கள் பட்டியல் சேகர் – மதுபாலா ஆகியோரின் இளைய மகன். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனின் சகோதரர் ஆவார்.
நடிகர் கிருஷ்ணாவுக்கும் கோவையை சேர்ந்த ரங்கநாதன் – வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் இன்று (06-02-2014) காலை 9.00. மணியளவில் திருமணம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இத்திருமணத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா மனைவியுடன் கலந்து கொண்டார்..