full screen background image

தீபாவளிக்கு வெளியாகிறது ‘கோட்டா’ திரைப்படம்.

தீபாவளிக்கு வெளியாகிறது ‘கோட்டா’ திரைப்படம்.

தமிழில் திரைப்படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருவது நம் தமிழ் திரைப்படத் துறைக்கான பெருமைகளில் ஒன்று.

அதன் வழியில் இயக்குநர் அமுதவாணனின் இயக்கத்தில் உருவான கோட்டா’ திரைப்படம் இப்படியான சமூக அங்கீகாரத்தைப் பெற்று, இதுவரையிலும் 43 சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது.

இந்தப் படத்தில் பவாஸ், நிஹாரிகா, ஆதில், செல்லா, சுஜி  சுபர்ணா, மானஸி’ நரேஷ்  ‘அப்பா’ ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் – ப.அமுதவாணன், ஒளிப்பதிவு – ப. அமுதவாணன், கவாஸ்கர் ராஜு, இசை – ஆலன் செபஸ்டியன், படத் தொகுப்பு – வினோத் ஸ்ரீதர், பாடல்கள் – கேமி மற்றும் ஸ்ரீ, வண்ணம் – ஸ்ரீராம், விளம்பர வடிவமைப்பு – சசி & சசி, மக்கள் தொடர்பு – தியாகராஜன்.

கோட்டா படத்தின் திரைக்கதையை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் எழுதி படத்தை இயக்கியுள்ளார் அமுதவாணன்.

படத்தின் கதையைப் போலவே அதன் டெக்னிக்கல் டீமும் மிகச் சிறப்பாக களம் இறங்கியுள்ளது.

சர்வதேச அளவில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்து பல அங்கீகாரங்களைப் பெற்ற திரைப்படங்களை நம் தமிழ் ரசிகர்கள் கை கொடுக்க என்றும் மறப்பதில்லை.

இப்படம் நமக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்க, வரும்  தீபாவளி அன்று  திரைக்கு வரவிருக்கிறது.  

தீபாவளியை இந்தக் கோட்டா’ திரைப்படத்துடன் கொண்டாட தயாராகுங்கள் ரசிகர்களே..!

Our Score