புதுமுகங்களின் நடிப்பில் வரவிருக்கும் ‘கூட்டாளி’ திரைப்படம்

புதுமுகங்களின் நடிப்பில் வரவிருக்கும் ‘கூட்டாளி’ திரைப்படம்

எஸ்.பி.பிக்செல்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.சுரேஷ் பாபு, பி.பெருமாள்சாமி இருவரும் இணைந்து, தயாரித்துள்ள திரைப்படம் 'கூட்டாளி.'

முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகிவரும், இத்திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாகவும், கிரிஷா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கல்யாண், அருள்தாஸ், கௌசல்யா, உதயபானு மகேஸ்வரன், போஸ்டர் நந்தகுமார், அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ்,  ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் - சுரேஷ் நடராஜன்,  படத் தொகுப்பு - பிரஷாந்த் தமிழ்மணி், இசை – பிரிட்டோ மைக்கேல், நடன அமைப்பு - கல்யாண், ரமேஷ், கலை - சிவக்குமார், சண்டை காட்சி - ராம்போ விமல், தயாரிப்பு நிர்வாகம் - ஆர்.கிருஷ்ண பாண்டியன். பல திரைப்படங்களில் துணை, இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.கே மதி, இத்திரைப்படத்தின் மூலம் கதை, திரைகதை, வசனம் எழுதி  இயக்குநராகிறார்.

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நான்கு பேர் நண்பர்களாக, அவர்களோடு ஒரு பெண்ணும் தோழியாகிறார். இவர்களது வாழ்விலும் தொழிலிலும் ஒரு தோழியால் வரும் பிரச்சினைகளையும், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜனரஞ்சகமாகவும், விறுவிறுப்புடனும், படமாக்கி இருக்கிறார்கள். 

சென்னையில் துவங்கி, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என பல இடங்களில் பரபரப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்றி்ருக்கிறது.