full screen background image

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் ‘கூத்தன்’ படப்பிடிப்பு துவங்கியது..!

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் ‘கூத்தன்’ படப்பிடிப்பு துவங்கியது..!

நீல்கிரிஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான  நீல்கிரிஸ் முருகன் தயாரிக்கும் முதல் படம் ‘கூத்தன்.’

இந்த படத்தில் ராஜ்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் பிரபு தேவாவின் தம்பியான நாகேந்திர பிரசாத் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் கே.பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, கவிதாலயா கிருஷ்ணன், ஜூனியர் பாலையா, ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், மற்றும் புதுமுக நடிகர் சுரேஷ், தீனா, ஆனந்த், கெளதம், மற்றும் நடிகை  ஸ்ரீஜிட்டா, கீரா, சினிதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – மாடசாமி,  இசை – பாலாஜி,  படத் தொகுப்பு – பீட்டர் பாபியா, கலை -சி.ஜி.அனந்த்,  நடனம் – கல்யாண். சுரேஷ், நிர்வாக தயாரிப்பு – மனோஜ் கிருஷ்ணா, எழுத்து, இயக்கம் – வெங்கி.A.L. 

இந்தப் படத்தின் துவக்க விழா மற்றும்  பூஜை நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் சென்னை, அடையாறு எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் ‘QUBE’ நிறுவனர் அருண் வீரப்பன் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

Our Score