full screen background image

துணை நடிகர்களின் வாழ்க்கைக் கதையை பேசும் ‘கூத்தன்’ திரைப்படம்..!

துணை நடிகர்களின் வாழ்க்கைக் கதையை பேசும் ‘கூத்தன்’ திரைப்படம்..!

தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூத்தன்’. 

இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரீஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன், நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபுதேவாவின் தம்பியான நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என பெரிய திரையுலக பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.

பாலாஜி இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு – மாடசாமி, படத் தொகுப்பு – பீட்டர் பாபியா, கலை – சி.ஜி.ஆனந்த், நடனம் – அஷோக் ராஜா, மக்கள் தொடர்பு – ஷேக், சுரேஷ், நிர்வாக தயாரிப்பு -மனோஜ் கிருஷ்ணா, தயாரிப்பு – நீல்கரிஸ் முருகன், எழுத்து, இயக்கம் – ஏ.எல்.வெங்கி.

சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

ஏற்கெனவே சினிமாவை பின்னணியாகக் கொண்டு நிறையப் படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் புதிய கோணத்தில் இதுவரையிலும் சொல்லாத கதையில் துணை நடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படத்தைத்  திரைக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. 

Our Score