தொலைக்காட்சி தொடர்களில் காமெடி நடிகராக வலம் வந்த ‘லொள்ளு சபா’ ஜீவா, ’ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் கொம்பு.
ஸ்ரீசாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.பன்னீர்செல்வம், பி.வானதி ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இதில் ஹீரோயினாக திஷா பாண்டே ஹீரோயினாக நடிக்க, பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வா் சந்திரபாபு, காயத்ரி, புவிஷா, சங்கா், அஸ்மிதா, யோகிராம், இன்னும் பலா் நடிக்கின்றனா்.
தேவ்குரு இசையமைக்க, சுதீப் ஒளிப்பதிவு செய்ய, கதிரேசன் படத்தொகுப்பு செய்கிறார். கஜினி குபேந்தர் சண்டை காட்சிகளை வடிவமைக்க, ராதிகா நடனம் அமைத்திருக்கிறார். இ.கார்த்திகேயன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – இ.இப்ராகிம்.
இரு இளம்பெண்களின் மர்ம மரணத்தை ஆராய்ச்சி செய்ய ஹீரோ ஜீவாவின் தலைமையில் ஐவர் குழு, கொலை நடந்த வீட்டிற்கு செல்கிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களை, நகைச்சுவை மற்றும் திகில் கலந்து இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.
தேனி, மதுரை, ஈரோடு, பொள்ளாச்சி, கம்பம், போடிநாயக்கனூர், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய படகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் ‘கொம்பு’ படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.