சமுத்திரக்கனி-சங்கவி நடிக்கும் ‘கொளஞ்சி’ திரைப்படம்

சமுத்திரக்கனி-சங்கவி நடிக்கும் ‘கொளஞ்சி’ திரைப்படம்

ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் தயாரிக்கும் புதிய படம் ‘கொளஞ்சி.’ இவர் ‘மூடர் கூடம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கி பலரின் பாராட்டை பெற்றவர்.

சிம்புதேவன் மற்றும் நவீன் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன், இந்த ‘கொளஞ்சி’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.

kolanji movie stills

தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும்,  இதனால் ஏற்படும் விளைவுகளும்தான் ‘கொளஞ்சி’ படத்தின் கதை.

_MG_7820

சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன்  ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

_MG_3065

ராசிபுரம், கோக்கராயன்பேட்டை போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது ‘கொளஞ்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.

Our Score