‘கொளஞ்சி’ படத்தின் இசை வெளியானது

‘கொளஞ்சி’ படத்தின் இசை வெளியானது

ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக ‘மூடர்கூடம்’ நவீன் தயாரிப்பில் தனராம் சரவணன் இயக்கத்தில் உருவான ‘கொளஞ்சி’ திரைப்படத்தின் இசை இன்று வெளியானது. மேலும் இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர் சமுத்திரக்கனி தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார்.

இந்த ‘கொளஞ்சி’ படத்தில் சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார்,  கிருபாகரன்,  நசாத்,  ரஜின்.எம்,  பிச்சைகாரன் மூர்த்தி,  ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘தமிழன்டா’ பாடல் சமீபத்தில் யூடுயுப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

‘கொளஞ்சி’ படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு பாடலை யுகபாரதியும் மற்ற பாடல்களை தயாரிப்பாளர் நவீனும் எழுதியுள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – விஜயன் முனுசாமி, படத் தொகுப்பு – ஆதியப்பன் சிவா.

‘கொளஞ்சி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகிறது.

 

Our Score