‘கோலமாவு கோகிலா’வின் நாயகன் நயன்தாராதான்..!!!

‘கோலமாவு கோகிலா’வின் நாயகன் நயன்தாராதான்..!!!

ஒரு நடிகைக்கான மிகப் பெரிய சாதனை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுவதோ, ‘பாக்ஸ் ஆபீஸ் குயின்’ ஆக இருப்பதோ இல்லை. ஒரு படத்தில் நாயகனாகவே மாறுவதுதான்..!

இத்தனை ஆண்டுகளாகவே ஒரு படத்தில் நாயகன் இல்லாதபோது, எளிதாக அதை நாயகியின் படம் என்ற வரையறைக்குள் கொண்டு வந்து விடுகிறோம். இந்த கருத்தை உடைத்தெறிந்து அவர் நாயகி அல்ல.. நாயகன் என்று சொல்லப்பட வேண்டும்.

இப்போது நயன்தாராதான் இப்படி சொல்ல வைத்திருக்கிறார். அவருடைய அடுத்த படமான கோலமாவு கோகிலா திரைப்படம் அப்படியொரு பெயரை அவருக்கும், அந்தப் படத்திற்கும் உருவாக்கிக் கொடுத்துள்ளது.

படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் படத்தின் இயக்குநரான நெல்சன்  படம் பற்றிக் கூறும்போது, “தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப் பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை.

மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றியின் ரகசியமே ‘சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது’ என்பதுதான். லைக்காவிற்கு இது மிகவும் பொருந்தும்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ், ‘கோலமாவு கோகிலா’வை தங்களது சிறப்பான  விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது…” என்றார்.

அனிருத் ரவிச்சந்தரின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப் பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது. குறிப்பாக, ‘கபிஸ்கபா’ என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது.

Our Score