full screen background image

‘கொலையுதிர் காலம்’ படப்பிடிப்பு லண்டனில் துவங்கியது..!

‘கொலையுதிர் காலம்’ படப்பிடிப்பு லண்டனில் துவங்கியது..!

இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் பிரபல ஹிந்தி  தயாரிப்பாளர் வாசு பாக்னானி  உடன் இணைந்து   தயாரிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின்  படப்பிடிப்பு  லண்டனில் இன்று துவங்கியது.

இது பற்றிப் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, “என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று. தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனமாக என்  பட நிறுவனம் இருக்க வேண்டும் என்கிற என் கனவு. அதற்கேற்றார்போல் அமைந்திருக்கிறது இந்த ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம். 

என் நண்பனும், இயக்குநருமான சக்ரி தோளேத்தி  மிக மிக நேர்த்தியான, ஆங்கில படங்களுக்கு இணையான தரத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார். அதற்கு வலு சேர்க்கும்விதமாக படத்தின் நாயகி நயன்தாரா இந்தக் கதைக்கு மிக பொருத்தமாக இருக்கிறார்.

பிரபல ஹிந்தி பட ஜாம்பவான் வாசு பாகனானியின்  பூஜா பிலிம்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிப்பது  எனக்கு உச்சக் கட்ட பெருமை…” என்கிறார் மிகப் பெருமையோடு..!  

Our Score